Karur: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் தரக்குறைவாக பேசிய சைதை சாதிக்
செந்தில் பாலாஜி வெளியே இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்காக 10 தொகுதிகளை வெற்றி அடைய செய்வார்.
கரூர்: மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களை போல் ரெய்டுகளை கண்டு பயப்படாமல் மோடியை எதிர்த்துப் பேசக்கூடியவர் என்று கரூரில் நடந்த பொது கூட்டத்தில் திமுக பேச்சாளார் சைதை சாதிக் பேசினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும் சைதை சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். உரையாற்றிய சைதை சாதிக், “அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் அமைப்புகளை வைத்து திமுகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய போது அதை எதிர்த்து நின்றவர் கருணாநிதி. அவர் வழிவந்த மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களை போல் ரெய்டுகளை கண்டு பயப்படாமல் மோடியை எதிர்த்துப் பேசக்கூடியவர். செந்தில் பாலாஜி மீது வைத்திருந்த பாசமும், நம்பிக்கையும் காரணமாக அவரை கைது செய்த மூன்று மணி நேரத்தில் நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என்று பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏன் எல்லா வேட்டை நாய்களையும் (அதிகாரிகள்) விடுகிறார்கள்.
செந்தில் பாலாஜி ஏன் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளியே இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்காக 10 தொகுதிகளை வெற்றி அடைய செய்வார். கோமியம் குடிப்பவர்களுக்கு மூளை வேலை செய்யாது என்று மீண்டும் நிரூபித்துள்ளார்கள். செந்தில் பாலாஜியை முடக்க பார்த்தார்கள். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தாலும் அவர் கண்காணிப்பில் கரூரில் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முன்மொழிந்து கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கவர்னர் மத்திய அரசுக்காக இங்கிருக்கும் ஏஜென்ட்” என்று கூறினார்.
செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என்று கவர்னர் கூறினார். செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்