மேலும் அறிய

Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும் பதவி என்ன ?

'கட்சியில் சீனியர்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான திட்டத்தை கனிமொழி - உதயநிதி இருவரும் சேர்ந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே வயது வரம்பு நிர்ணயம்’

தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற பெரும் கனவில் இருந்த திமுகவிற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயை பெரிதாக கண்டுகொள்ளாததன் விளைவை இப்போது அனுபவித்து வருகிறது திமுக. இந்த சூழலில், திமுகவை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே, தோல்வி குறித்து ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழுவினர் கட்டு, கட்டாக காரணங்களை அடுக்கியிருக்கும் நிலையில், நடந்து முடிந்த செயற் குழு கூட்டத்தில்  முக்கிய முடிவுகளை அறிவித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதிருப்தியில் சீனியர்கள்

குறிப்பாக, 70 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி இனி இல்லை என்ற அறிவிப்பு பலரை கொதிப்படைய வைத்திருக்கிறது. குறிப்பாக, ஏ.வ.வேலு, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளான 13 பேர் 70 வயதை கடந்தவர்களாக இருப்பதால் அவர்களது மாவட்ட செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளன.

அதோடு, கிளைக் கழகச் செயலாளர், பேரூர் கழக செயலாளர், நகர செயலாளர்கள் என அனைவரும் அந்த பதவியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும் என்றும் அதற்கான வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது திமுக நிர்வாகிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைமைக் கழகத்திலும் நடைபெறவிருக்கும் மாற்றம்

இந்நிலையில், திமுகவின் உயர்மட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெறவிருக்கின்றன. குறிப்பாக, திமுக தலைமைக் கழகத்தில் உள்ள பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தோல்விக்கு பின்னர் இணைந்த கரங்களாக செயல்படும் கனிமொழி - உதயநிதி

இப்படியான முடிவுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுப்பதற்கு உதயநிதியும், கனிமொழியும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். கட்சியை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதிலும், கட்சியில் உள்ள சீனியர்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் குறைக்கவும் இருவரும் இணைந்து கட்சிக்கான புதிய திட்டங்களை உருவாக்கியிருக்கின்றனர்.

செயல் தலைவரா ? பொதுச்செயலாளரா?

அதனடிப்படையில், விரைவில் கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படவிருக்கிறது. குறிப்பாக, திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் வயது மூப்பு தொடர்பாக துடிப்பாக செயல்பட முடியாத சூழலில் இருக்கும் நிலையில், அந்த முக்கியமான பொதுச்செயலாளர் பொறுப்பை கனிமொழிக்கு தருவது குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கும் நிலையில், கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு ஒன்றை மீண்டும் உருவாக்கி அதனை தனக்கு தர வேண்டும் என கனிமொழி கேட்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

துணைப் பொதுச்செயலாளராகும் உதயநிதி ஸ்டாலின்

அதோடு, துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக உதயநிதியை நியமிக்கவும், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கனவே இருப்பவர்களை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் திமுகவில் தீவிர ஆலோசனை சென்றுக்கொண்டிருக்கிறது.

எதிர்ப்பும் ; ஆதரவும்

கனிமொழிக்கு செயல் தலைவர் பொறுப்பு கொடுப்பதற்கு திமுகவின் சீனியர்கள் பலரும் ஆதரவளித்து வருவதாகவும், அதே நேரத்தில் அவருக்கு அப்படியான பதவி கொடுக்கப்படகூடாது என்று சிலர் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கியிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சியின் பொருளாளராக டி.ஆர்.பாலுவிற்கு பதில் ஏ.வே.வேலுவும் நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது.

எது எப்படியிருந்தாலும் விரைவில் திமுக தலைமை நிர்வாகிகள் மாற்றம் நடைபெறவிருப்பது மட்டும் உறுதி.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
P. Wilson : ’OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துக’ பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!
P. Wilson : ’OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துக’ பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
”திமுக ஆட்சியில் இந்த தெருக்கூத்தாடிகள் பாடியது ரசித்தீர்களே” சேகர் பாபுவிற்கு புஷ்பவனம் கேள்வி
”திமுக ஆட்சியில் இந்த தெருக்கூத்தாடிகள் பாடியது ரசித்தீர்களே” சேகர் பாபுவிற்கு புஷ்பவனம் கேள்வி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
Embed widget