மேலும் அறிய
Advertisement
"முதலமைச்சர் ஐயா அவர்களே, கண்டுபிடித்து கொடுங்கள் ப்ளீஸ் " - ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்
காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி கொலை குற்றவாளிகளை கைது செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் போராட்டம்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில், மர்மமான முறையில் காவலாளி கொலை செய்யப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆன நிலையில் கொடநாடு கொலை வழக்கு விசாரணையை தீவிரமாக மேற்கொள்ளாமலும், கொலை குற்றவாளிகளை கைது செய்யாமலும், உள்ள திமுக அரசு கண்டித்து, அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமையில், காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில், 300க்கும் மேற்பட்ட முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்த கோஷங்கள் எழுப்பப்பட்டது. விடியா அரசே, விடியா அரசே, விடை சொல்ல வேண்டும் விடியா அரசே என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டது.
அன்புக்குரிய முதல்வர்
அப்பொழுது பேசிய ஆர்.வி ரஞ்சித்குமார் தெரிவித்ததாவது: தயவுசெய்து, அன்புக்குரிய முதல்வர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் அய்யா அவர்களே, தயவு செய்து கண்டுபிடித்துக் கொடுங்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுங்க, தமிழகத்திற்கு அம்மா அவர்கள் எழுதி வைத்துவிட்டு சென்ற, சொத்துகளை மீட்டு கொடுங்க ப்ளீஸ் முதலமைச்சரா அவர்களே என தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion