மேலும் அறிய

"அதிமுகவை யார் சீண்டினாலும் அழிந்து போவார்கள்" -எடப்பாடி பழனிசாமி பேச்சு

தினந்தோறும் வழிப்பறி, கொள்ளை, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் நிறைந்து காட்சியளிக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்று முதன்முதலாக சேலம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவரது இல்லம் அமைந்துள்ள சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் இயக்கத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்று உள்ளேன். சேலம் மாவட்டம் ஒரு ராசியான மாவட்டமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவை பல பேர் பலவிதமாக பேசி வருகின்றனர் அதை முறியடிக்கும் விதமாக தொண்டர் கூட்டங்கள் கூடி நாங்கள் இருக்கின்ற வரை அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது என்று நிரூபித்து காட்டியுள்ளனர். அதிமுக சரிந்துவிட்டது என்று சொன்னவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு, அது சரியவில்லை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அளவிற்கு காட்சியளிக்கிறது என்று கூறினார்.

அதிமுக கட்சியை தமிழகத்தில் எந்த கட்சியும் வெல்ல முடியாது. அதிமுகவில் உள்ளவர்கள் பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவைக்கு செய்கின்ற கட்சி அதிமுக. எந்த கொம்பனாலும் அதிமுக தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு முதல்வர் ஸ்டாலின் போட்டு வருகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியை அழிக்க, ஒழிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் செயல்கள் பலிக்காது. கானல் நீராகத்தான் மாறும். அதிமுக தொண்டர் எதற்கும் அஞ்சமாட்டார்கள், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சட்டப்படி சந்தித்து வெற்றி பெற்று காட்டுவோம் என்றார்.

அதிமுகவை ஒழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் தொட்டுப் பார்க்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வரும், நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறந்து வைத்து வருகிறார்கள். நாங்கள் பெற்ற குழந்தைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார். அதிமுக ஆட்சி காலம் பொற்கால ஆட்சி என்று மக்கள் பேசி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எப்பொழுது ஆட்சி போகுமோ என்று மக்கள் பேசி வருகிறார்கள்.

தினந்தோறும் வழிப்பறி, கொள்ளை, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. இதை எத்தனை முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அதை கண்டு கொள்ளவில்லை. இதற்கு முடிவு கட்ட வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Embed widget