ADMK : கட்சியை கெடுப்பது ஓபிஎஸ்தான்.. குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி
பொருளாளர் என்ற முறையில் தனது கடமையை செய்யாமல் கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த ஓபிஎஸ் உரிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் தனது கடமையை செய்யாமல் கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாக ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களிடையே செல்வாக்கையும், நம்பிக்கையும் இழந்துவிட்டார் என ஈபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈபிஎஸ் தரப்பில் வெளியிடப்பட்ட மனுவில், ”உள்ளாட்சி இடை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஓ.பி.எஸ் உரிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை, இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை.
#JUSTIN | கட்சிநலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஓ.பி.எஸ். - இபிஎஸ்https://t.co/wupaoCQKa2 | #AIADMK #SupremeCourt #OPanneerselvam @OfficeOfOPS pic.twitter.com/8MgWxmpXN0
— ABP Nadu (@abpnadu) July 5, 2022
மேலும் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்பதை தாண்டி ஓ.பி.எஸ். கட்சியின் பொருளாளர் , ஆனால் அவர் கட்சி நிதியை குறித்து வெளியிடாததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையும், கட்சி செலவுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பொருளாளர் என்ற முறையில் தனது கடமையை செய்யாமல் கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 23ம் தேதி பொதுக்குழவில் நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது ஓ.பி.எஸ் அ.தி.மு.க தொண்டர்களிடையே செல்வாக்கையும், நம்பிக்கையையும் இழந்துவிட்டார் என்பது தெளிவானது, எனவே தான் இணைந்து செயல்பட ஓ.பி்எஸ் மறுத்து வருகிறார்.
மேலும் வரும் 11ம் தேதி கூடும் அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் குறித்து முடிவெடுக்க விரிவான அஜண்டாவை பொதுக குழு உறுப்பினர்கள் 2432 பேர் கடிதம் மூலம் தயாரித்துள்ளனர்
தனக்கான செல்வாக்கு, நம்பிக்கையை கட்சியினரிடையேயும், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியிலும் இழந்ததால் ஓ.பி.எஸ் பொதுக்குழுவை நடத்த தடை கோருகிறார்இவ்வாறு கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு கட்சி செயல் பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க முற்படுகிறார் என ஈ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்