"எல்லாரும் விஜய் ஆகிவிட முடியாது" தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு தன்னுடைய ஸ்டைலில் பங்கம் செய்த துரைமுருகன்
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை சாடிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் மற்றும் ஆகிவிட முடியாது என முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனிடம், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் செயல்பாடுகள் அரசியல் வருகை சார்ந்து நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பட்டது. இக்கேள்விக்கு தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்த துரைமுருகன், ஒருவன் இளநீர் கடை ஆரம்பித்து லாபம் ஈட்டினால் மற்றவர்களும் அதையேதான் பின்பற்றுவார்கள் என விமர்சித்தார்.
எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது!
புதிதாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வரும் நடிகர்கள் அனைவரும், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆராகவோ அல்லது தற்போதைய முதலமைச்சர் விஜயாகவோ மாறிவிட முடியாது எனவும் சாடினார். மேலும், தற்போதைய அரசியலை பொறுத்த அளவில் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றிற்கு இடமில்லை எனவும், தேர்தலில் அதிக சீட் கொடுத்தால் கட்சிகள் கூட்டணிக்கு வருவதாகவும், இல்லையெனில் வேறுகட்சிகளுக்கு ஆதரவளிக்கும் நிலைதான் உள்ளதாகவும் துரைமுருகன் விமர்சனம் செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்























