மேலும் அறிய

'திமுக - அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியது உண்மைதான்’ உடைத்த முக்கிய நபர்..!

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாகவும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரு கட்சி தலைமை தரப்பிலும் சென்றது உண்மைதான் என்று மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மனம் மாறினாரா மு.க.ஸ்டாலின்

நேற்று இந்த விவாதம் எழுந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் மறுத்து வந்ததாகவும், பின்னர் பல முக்கிய நிர்வாகிகள், நபர்கள் அவரிடம் வலியுறுத்திய பின்னர், இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்டோரை அழைத்து இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கோலப்பன் நம்மிடையே தெரிவித்துள்ளார். 

விஜயை வீழ்த்த  ஒன்றுசேர்ந்த திராவிட கட்சிகள்

50 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழ்நாட்டை திமுக, அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளே மாறி, மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக, அதே நேரத்தில் மிக எழுச்சியாக விஜய் வெற்றிபெற்றிருப்பது திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டு செய்திருப்பதாகவும், விஜயை இந்த முறை முதலமைச்சராக விட்டுவிட்டால், அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்குவது சிரமம் என்றும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாகவும், அதனடிப்படையில் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோலப்பன் தெரிவித்துள்ளார் 

அதிமுக கூட்டணியை மறுத்த மு.க.ஸ்டாலின்

இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுகவுடான கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், இருப்பினும் கட்சித் தலைமை ஏதேனும் முடிவெடுத்தால் அதனை நாங்கள் ஏற்போம் என்றும் சூசகமாக பதிலளித்துள்ளது தகிக்கும் நெருப்பில் மீண்டும் எண்ணெய் ஊற்றியதுபோல பற்றி எரியத்தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, அப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவே இல்லை என டி.கே.எஸ் இளங்கோவன் மறுக்கவில்லை என்பதும் மாறாக கட்சித் தலைமை ஏதும் முடிவு எடுத்தால் அதை நாங்கள் ஏற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.

(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget