மேலும் அறிய
”போலீஸுக்கு தெரியாம போதை பொருட்கள் பரவலாக புழங்கமுடியாது” - அன்புமணி ராமதாஸ் பேச்சு
மகாபலிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் கட்சியின் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டு முதல்முறையாக இன்று செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரம் மற்றும் தேவனரி பகுதியில் , 81 அடி உயர கொடி கம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கொடியேற்றினார். முன்னதாக அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகாபலிபுரம் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள மாமல்லன் சிலைக்கு அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ”செங்கல்பட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து விதமான , தடுப்பூசிகளும் தயாரிக்க முடியும். உடனடியாக இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
கல்பாக்கம் அணு கதிர்கள் தாக்குதலால் பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலக் கேடுகள் வந்து கொண்டிருக்கிறது. பழைய அணு உலை வைத்து இயங்கி வருகிறது, இதனால் சுற்றியிருக்கும் கிராமங்களில், வீடுகளை கட்ட முடியவில்லை, நிலங்களை விற்க முடியவில்லை, திருமணங்கள் கூட நடத்த முடியவில்லை. கல்பாக்கத்தில் எக்காரணம் கொண்டும் இந்தியைத் திணிக்கக்கூடாது , உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் சர்வசாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. காவல்துறைக்கு தெரியாமல் இது போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக முடியாது. எனவே தமிழக அரசு உடனடியாக அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பேசுகையில் செங்கல்பட்டில் ராகிங் கொடுமையால் உயிரிழந்த மாணவி குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் உடனடியாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். 50 ஆண்டுகளாக இருக்கும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து உள்ளனர். திராவிட மாடல் தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்வைக்கும் அனைத்து மாடல்களும் தமிழகத்தின் வளர்ச்சி மையப்படுத்தி உள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion