மேலும் அறிய

RS Bharathi: மகாராஷ்டிராவில் கேவலமான விளையாட்டை பாஜக விளையாடி வருகிறது - ஆர்.எஸ். பாரதி

அரசியலில் எப்படிப்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டாலும், யார் பேசினாலும், எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அண்ணாமலைகள் சவால் விட்டாலும் அதனையெல்லாம் தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் திமுகவில் உள்ளனர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் நெல்லை டவுண் லட்சுமி மஹால் வைத்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் டி.பி.எம் மைதீன் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கழக அமைப்பு செயலாளர்  ஆர் எஸ் பாரதி, திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு 100 மூத்த நிர்வாகிகளுக்கு ரூபாய் 5000 பொற்கிழி மற்றும் கலைஞர் சிலை வழங்கி கௌரவித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறும் பொழுது, “கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார். அதன்படி நெல்லை மாநகர திமுக சார்பில் திமுகவின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழியுடன் கலைஞர் சிலையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொற்கிழி வழங்கும் நிகழ்வு தொடங்கும். தொண்டர்களை மதிக்கும் மாபெரும் இயக்கம் திமுக என்பதை நிலை நிறுத்தும் வகையில்  தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த இயக்கத்தை எந்த சக்தியாலும் அழித்து விட முடியாது என்பதை  நிரூபிக்கின்ற வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

அரசியலில் எப்படிப்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டாலும், யார் பேசினாலும், எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அண்ணாமலைகள் சவால் விட்டாலும் அதனையெல்லாம் தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் திமுகவில் உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் நடக்கும் சம்பவத்தை பார்க்கும்போது, பாட்னா எதிர்க்கட்சி கூட்டத்தைக் கண்டு மோடி பயந்துவிட்டார் என்பது தெரிகிறது. மகாராஷ்டிராவில் கேவலமான விளையாட்டை பாஜக விளையாடி வருகிறது. மோடியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மராட்டியம் சிவாஜி பிறந்த மண் கர்நாடகத்தில் பாஜக தோல்வியை தழுவிய போல் மராட்டிய மாநிலத்திலும் 2024 ல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்” என்றார். அஜித் பவர் போன்றோர் தமிழகத்தில் உள்ளனர் என அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை ஒரு பொருட்டே கிடையாது. அவரைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். அண்ணாமலைக்கு  என்ன தெரியும் அரசியலை பற்றி, நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் காமராஜர் குறித்தும் அண்ணாமலை பேசியுள்ளார். குடியாத்தம் தேர்தல் முதல் காமராஜர் அடக்கம் வரை திமுக அனைத்து உதவிகளையும் காமராஜருக்கு செய்துள்ளது”என்றார். தமிழக ஆளுநர் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருகிறார் என்ற கேள்விக்கு, தமிழகம் பெரியார் பிறந்த மண் அண்ணாவால் வளர்ந்த மண் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட மண் இங்கு சனாதனத்திற்கு கடுகளவும் இடம் கிடையாது என அவர் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget