Boycott Qatar Airways : கர்த்தரை புறக்கணிப்போம்.. அடே அது கத்தார்டா... வலுக்கும் எதிர்ப்பு.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கர்த்தார் நாட்டை எதிர்க்கும் விதமாகவும் பாஜகவினர் #BoycottQatarAirways ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்தப்புகாரானது பாஜவின் தலைமைக்கும் புகாராக அனுப்பப்பட்டது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே பாஜக செய்தி தொடர்பாளாரக இருந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜின்டாலும் தொடர்ச்சியாக மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக புகார் எழுந்தது.
தொடர்ந்து நுபுர் சர்மா தெரிவித்த நபிகள் நாயகம் குறித்த கருத்திற்கு எகிப்து, சவூதி அரேபியா, குவைத், ஏமன், கத்தார், யூஏஇ உள்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்தியா சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டப் பின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்றார்.
இந்தநிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கர்த்தார் நாட்டை எதிர்க்கும் விதமாகவும் பாஜகவினர் #BoycottQatarAirways ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது, அவர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதில் ஒரு சில இதோ..!
இவனுங்க யார புறக்கணிக்கிறோம்னு சொன்னானுங்களோ..
— ⚫..கட்டனூர் சேக்..🔴 (@ShaikAb08232410) June 6, 2022
அவங்களே வந்து முதலில் பாய்காட்னு பிழையில்லாமல் ௭ழுத கத்துக்க சொல்லி துப்பிட்டு போய்ட்டாங்க.. 😂😂🤦♂️🤦♂️ pic.twitter.com/fw0eDINgyn
அப்டி எத்தன டைம் கத்தார் ஏர்வேஸ்ல போய்ருக்கீங்கணே..
— James Stanly (@JamesStanly) June 6, 2022
*மொட்ட மாடில நின்னு பாக்றதோட சரிணே.. pic.twitter.com/xtyLaPaz3Y
டேய்
— ☕️ டீ இன்னும் வரலை ⏳ (@Raajavijeyan) June 7, 2022
I'm against Qatar Airways..னு
பதிவு போடுறவன் மூஞ்சிய பார்த்தியா
அதுல ஒருத்தன்ட்ட கூட பாஸ்போர்ட்டே இல்லைடா pic.twitter.com/YTSqjxABqw
Boycott Qatar airways ட்ரெண்ட் பண்ணி பழி வாங்க போறோம்..
— ஜோ...😎😎 (@ItsJokker) June 6, 2022
~ முதல்ல உள்ளூர் ட்ரெயின்ல டிக்கெட் வாங்கி ட்ராவல் பண்ணி பழகுடா ஹேரு.. pic.twitter.com/qJGj1WZddl
கர்த்தரை புறக்கணிப்போம்
— தட்டான் பூச்சி (@thattampoochi) June 7, 2022
அடே அது கத்தார்டா வெண்ணெ😂😂😂😂 pic.twitter.com/MdeUPs7QVn
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்