மேலும் அறிய

Anand Srinivasan: தொழிலதிபர்களிடம் பா.ஜ.க. வாங்கிய நிதி பட்டியல் விரைவில் ரிலீஸ் - ஆனந்த் சீனிவாசன் அதிரடி பேட்டி

தொழிலதிபர்களிடம் பா.ஜ.க. கோடிக்கணக்கில் நிதி பெற்றுள்ளது என்றும், அதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியபோது,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டது எனக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by Anand Srinivasan (@anandsrinivasan)

விரைவில் பட்டியல்:

திமுக தலைமையில் இருக்கும் எங்களது கூட்டணி 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  இந்தியாவைச் சார்ந்த ஊடகங்கள் பல ஊழல்களை மறைக்கிறது.  இப்பொழுது புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. வருமானவரித்துறை ஆய்வுகளை வைத்து பல  தொழிலதிபர்களிடமிருந்து கோடிகணக்கில் பாஜக நன்கொடை பெற்றுள்ளது. மிக விரைவில் அதற்கான பட்டியல் வெளிவரும்.  ஊழலை செய்யவில்லை என கூறிய பாஜக எவ்வளவு வாங்கியுள்ளது? என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

பிரதமரை வரவேற்கிறோம்:

பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம். அந்த வகையில் மோடியையும் நாங்கள் வரவேற்கிறோம். திருப்பூரில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது, திருப்பூரில் நீண்ட நாட்களாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.  இதுவரையில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை போல் காலதாமதம் செய்யாமல், கட்டுவாரா என எதிர்பார்ப்போம். 

திருப்பூரில் பாஜகவிற்கு ஆதரவு இருக்கிறது என்ற பெயரில் இதை செய்கிறார்கள்.  கோடிக்கணக்கில் குதிரை பேரம் செய்து ஆட்சி செய்கிறது. மக்களுக்கும் தொழில் துறைக்கும் ஏதாவது நல்லது செய்தால் நன்றாக இருக்கும்.

காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. திமுகவின் தலைமையில், காங்கிரஸ் கூட்டணி இருக்கும்.  2004இல் 40க்கு 40 வெற்றி பெற்றது போல், இந்த முறையும் திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே அமையும். திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்க உள்ளேன். பாஜகவின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அதனால் காங்கிரஸில் மட்டும் வாரிசுகள் இருக்கிறது என்று கூற முடியாது, 40 பேருக்கும் மேல் வாரிசுகள் பாஜகவிலும் பதவியில் இருக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன்  தெரிவித்தார்.

Also Read: Prime Minister Modi: என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா.. 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Embed widget