மேலும் அறிய

Erode By Election 2023: ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே போட்டி - மறைமுகமாக கூறிய அண்ணாமலை..! காரணம் இதுதான்

நிற்ககூடிய ஒரு வேட்பாளரை  வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை -  திருச்சியில் அண்ணாமலை பேட்டி

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்கு கட்சியின் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது  அண்ணாமலை பேசியது, "ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.  அங்கு நிற்க கூடிய வேட்பாளர் பண பலம் , படைபலம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் ஒரே ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும். அந்த வேட்பாளரின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. பா.ஜ.க. வின் நிலைப்பாடு ஆகும். குறிப்பாக நிற்ககூடிய ஒரு வேட்பாளரை  வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை என்றார்.  திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும் , மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம். கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும். நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அ.தி.மு.க. தான்.

Erode By Election 2023: ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே போட்டி - மறைமுகமாக கூறிய அண்ணாமலை..! காரணம் இதுதான்

மேலும் திமுக இடைத்தேர்தலில் பணம் அதிகம் செலவு செய்வார்கள். தி.மு.க தேர்தல் குழுவில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலேயே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது தெரிகிறது. எனவே இவைற்றையெல்லாம் எதிர்த்து களம் காண பலம் வாய்ந்தவர்  வேட்பாளராக இருக்க வேண்டும். எந்தவித குழப்பமும் இல்லை எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க.

ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பலர் அந்த கட்சியில் இருக்கிறார்கள் என்றார். குறிப்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னால் அவர் கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா? என்பது சந்தேகம் தான். ஈ.வி.கே.எஸ் அவர்கள் மற்ற கட்சிகளை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர்...  திருச்செந்தூர் கோவில் 5309 மாடுகள் காணோம் 1302 கோடி கணக்கு வழக்கில் குறைகள் உள்ளது. 15 லட்சம் லட்சம் பில்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. இது இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இதுவரை கூறவில்லை. நான் கேட்கும் கேள்விக்கு ஆதாரப்பூர்வமாக பதில் இல்லை. ஒரு திருக்கோயிலின் உண்டியலில் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை அந்த கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தவிர கோயில் நிர்வாகத்தில் பணிபுரியக்கூடிய அதிகாரிகள் பஜ்ஜி, போண்டா, மிச்சர் போன்ற உணவு வகைகள் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget