சீர்காழி அருகே இரு சமூகத்தினர் இடையே இருந்து வரும் முன் விரோத மோதலில் கோயில் திருவிழாவில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இரு சமூகத்தினர் இடையே முன் விரோதம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே முன் விரோத மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே 31 -ஆம் தேதி இரவு வெள்ளிக்கிழமை அன்று வைத்தியநாதபுரத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. இரவு சாமி ஊர்வலத்தின் போது ஒரு தரப்பினர் திடீரென பெட்ரோல் வெடி கொண்ட வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.  கோயில் திருவிழாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும், அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசி சென்றுள்ளனர். அதில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் இன்றி யார் மீதும் தீ படாததால் அங்கிருந்தவர்கள் காயம் இன்றி தப்பியுள்ளனர்.


Sourav Ganguly: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்..கம்பீரை சாடிய கங்குலி! என்ன சொன்னார் தெரியுமா?




புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை


மேலும் கொழுந்து விட்டு எரிந்த தீயை பொதுமக்களும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் தண்ணீர் விட்டு அனைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இது குறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் கிராம மக்கள் சார்பில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்தும் புகார் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யாதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலைய வாசலில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Suryakumar Yadav: உடல் எடையை குறைத்த சூர்யகுமார் யாதவ்? எப்படி நடந்தது இந்த மாற்றம்?




 உறுதியளித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்


அதனை அடுத்து காவல்  நிலையம் முன்பு சாலைமறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 


Watch Video: ஆல் ஏரியா ஐயா கில்லிடா!.. கிரிக்கெட் பேட்டில் கோல்ஃப் ஆடிய ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ!




5 பேர் கைது


இந்நிலையில் சாமி ஊர்வலத்தின் போது பெட்ரோல் குண்டு வீசியதாக  கொண்டத்தூர் பண்டாரவாடை பகுதி சேர்ந்த சந்திரன் என்பவரது 29 வயதான நிஷாந்த், செல்வம் என்பவரின் மகன் 19 வயதான ராதாகிருஷ்ணன், ரமேஷ் என்பவரது மகன் 19 வயதான சஞ்சய், லோகநாதன் என்வரது 24 வயதான மகன் அமிர்த கணேசன், செல்வம் என்பவரின் மகன் 23 வயதான மதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். 147,148  உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து , மேலும் மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


T20 World Cup: ரோஹித் சர்மா - விராட் கோலிதான் ஓபனர்ஸ்.. அடித்துச்சொல்லும் கவாஸ்கர்!