T20 World Cup: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பேட்டை வைத்து கோல்ஃப் விளையாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024:


ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள் இன்று (ஜூன் 2) தொடங்கியது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, ஓமன், உகாண்டா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட  20 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன.


பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்:


இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா விளையாடின. அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. முன்னதாக நேற்று (ஜுன் 1) நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடியது இந்திய அணி. இதில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அந்தவகையில் கடந்த 16 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் ஜெர்சியில் களம் இறங்கினார் ரிஷப் பண்ட். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் ரிஷப் பண்ட் களம் இறங்கியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. 


அதேபோல் நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 53 ரன்கள் எடுத்தார். 


 கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த ரிஷப் பண்ட்:


இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரிஷப் பண்ட் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து ஹோட்டல் அறையில்  கோல்ஃப் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது தனது பேட்டின் மூலம் அவர்  கோல்ஃப் விளையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ரிஷப் பண்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,  "என்ன ஒரு 'புட்'னர்ஷிப் சூர்யகுமார் யாதவ்.





நல்ல ஆற்றல். வூஹூ" என்று தலைப்பிட்டு பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிரிக்கெட் பேட்டை வைத்து கோல்ஃப் விளையாடுவது எப்படி இருக்கிறது பண்ட் என்று நகைச்சுவையுடன் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: Watch Video: "அப்போ எனக்கு பசிக்கும்ல"..கூலாக அமர்ந்து சாப்பிட்ட விராட் கோலி! வைரல் வீடியோ!


மேலும் படிக்க: Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?