உலகக் கோப்பை டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிதான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


ஐசிசி உலகக்கோப்பை 2024:


ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி இருக்கிறது ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை. அந்தவகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் தொடங்கியது முதல் போட்டி. இதில் அமெரிக்கா மற்றும் கனடா விளையாடியது.


அதன்படி தங்களது வெற்றிக்கணக்கை முதல் போட்டியிலேயே தொடங்கி உள்ளது அமெரிக்கா. அதேபோல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணியுடன் விளையாடியது இந்திய அணி. இதில் விராட் கோலி விளையாடவில்லை. இதனால் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்கள். 


தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும்:


இந்நிலையில் ஐபிஎல் சீசன் 17ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி உலகக் கோப்பையிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்த  முறை ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி தான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும்.


ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதியில் சிறப்பாக விளையாடிய விதத்தை வைத்து ரோஹித் ஷர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்குவதற்கு தகுதியானவர் என்று சொல்லலாம். நல்ல வீரர்கள் நல்ல வீரர்களே அவர்கள் இடது அல்லது வலது கை வீரர்களாக இருந்தாலும் எங்கே வேண்டுமானாலும் பேட்டிங் செய்யக்கூடியவர்கள்.


அற்புதமான பேட்ஸ்மேன்கள்:


எனவே இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் தான் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தொலைக்காட்சியில் அது போன்ற இடது – கை பேட்ஸ்மேன்கள் பற்றிய கலவையை பேசுவதற்கு நன்றாக இருக்கும். ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரால் உங்களுக்கு 2 அற்புதமான பேட்ஸ்மேன்கள் கிடைக்கின்றனர்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பாக தற்போதுள்ள ஃபார்முக்கு விராட் கோலி பேட்டிங் செய்வதற்காக சில ஓவர்கள் அல்லது 5 பந்துகள் கூட காத்திருக்க வேண்டியதில்லை. பொதுவாக நீங்கள் நேராக களத்திற்கு வந்து விளையாடுவது வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.  தனியாக நடந்து வருவதற்கும் பார்ட்னருடன் களமிறங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நாம் சேர்ந்து விளையாடுவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு களமிறங்குவார்கள்” என்று பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர். 


மேலும் படிக்க: Watch Video: "அப்போ எனக்கு பசிக்கும்ல"..கூலாக அமர்ந்து சாப்பிட்ட விராட் கோலி! வைரல் வீடியோ!


மேலும் படிக்க: USA vs Canada T20 WC 2024: ஜோன்ஸ் வெறித்தனம்! வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையை தொடங்கிய அமெரிக்கா!