மேலும் அறிய

இனி சனீஸ்வர பகவானை எளிதில் தரிசிக்கலாம் - விரைவில் ரயில் போக்குவரத்து தொடக்கம்....!

காரைக்கால் பேரளம் இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதை அடுத்து ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்கால் - பேரளம் ரயில் பாதைப் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டிற்குள் ரயில் போக்குவரத்துத் தொடங்குமா? என்ற எதிா்பாா்ப்பு பயணிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

1898 -ல் தொடங்கப்பட்ட ரயில் போக்குவரத்து

காரைக்கால் - பேரளம் இடையே அப்போதைய பிரிட்டிஷ் நிா்வாகம், பிரெஞ்சு நிா்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி 1898 -ம் ஆண்டு ரயில் போக்குவரத்தை தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் காரைக்காலில் இருந்து, பேரளம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் வாய்ப்பும், மற்ற ஊா்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டது. ஆனால், 1980 -ம் ஆண்டு ரயில்வே நிா்வாகம் காரைக்கால் - பேரளம் இடையே மீட்டா் கேஜ் பாதையை நிறுத்தி, அதற்கான தண்டவாளத்தை அகற்றியது.

இனி சனீஸ்வர பகவானை எளிதில் தரிசிக்கலாம் - விரைவில் ரயில் போக்குவரத்து தொடக்கம்....!

320.64 கோடி ரூபாயில் புதிய ரயில்பாதை 

இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த சூழலில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதிநிலை அறிக்கையின் போது நிதி ஒதுக்கி 23.55 கிலோமீட்டர் தொலைவுக்கு 320.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி - தமிழ்நாடு இணைப்பு 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தமிழகப் பகுதியான பேரளத்தை இணைக்கும் இந்த புதிய பாதையில், 1 பெரிய மேம்பாலம், 77 சிறிய பாலங்கள், 21 சுரங்கப் பாதை மற்றும் ரயில்வே கேட் அமைப்புடன் பணிகள் கடந்த 2022 ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது காரைக்கால் - பேரளம் இடையேயான 18 கிலோமீட்டர் தொலைவுக்கு 90 சதவீதமும் மீதியுள்ள 5.55 கிலோ மீட்டர். தொலைவுக்கு 80 சதவீதப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. நிலத்தில் மணல் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பாலங்கள், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டப் பணிகள் பெருமளவில் முடிந்துவிட்டன.

இனி சனீஸ்வர பகவானை எளிதில் தரிசிக்கலாம் - விரைவில் ரயில் போக்குவரத்து தொடக்கம்....!

நிறைவுற்ற பெரும்பாலான பணிகள் 

காரைக்கால் மாவட்டத்துக்குள் தண்டவாளம், பாலம், சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளும் முடிந்துவிட்டன. மாவட்டத்தின் எல்லையில் இருந்து பேரளம் வரையிலான பகுதியில் மட்டுமே குறிப்பிட்ட சில இடங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், மற்ற இடங்களில் பணிகள் நடைபெறுவதாகவும் ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மின் மயமாக்கலுக்கான கம்பிகள் அமைத்தல், தூண்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2025 போக்குவரத்து

இந்த பாதையில் ரயில் போக்குவரத்து 2025 பொங்கல் பண்டிகைக்குள் தொடங்கவேண்டும் என்பது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில இடங்களில் பணிகள் நிறைவு பெறாததால் இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் சிக்னல், டிராக் நிலை, தகவல் தொடா்பு உள்ளிட்ட சோதனைகள், இறுதி சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இனி சனீஸ்வர பகவானை எளிதில் தரிசிக்கலாம் - விரைவில் ரயில் போக்குவரத்து தொடக்கம்....!

சனீஸ்வரன் கோயிலுக்கு நேரடி தொடா்பு

மேலும் புதுவை மாநிலத்தின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு இத்திட்ட விவகாரத்தைக் கொண்டு சென்று உரிய அழுத்தம் கொடுக்கவேண்டுத்து விரைவாக ரயில் சேவையை துவங்க வழிவகை செய்யவேண்டும் என பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை வைத்துள்ளனர். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து நாகூா் வழியாக காரைக்காலுக்கும், மயிலாடுதுறை, பேரளம் வழியாக காரைக்கால், திருநள்ளாறுக்கும் பயணிகள் நேரடியாக வந்து சேரமுடியும். வட மாநில வழிபாட்டுத் தலங்களுக்கும், நவகிரக தலங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் சனிஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ள திருநள்ளாறுக்கும் நேரடி தொடா்பு ஏற்படும்.

இனி சனீஸ்வர பகவானை எளிதில் தரிசிக்கலாம் - விரைவில் ரயில் போக்குவரத்து தொடக்கம்....!

பயணிகள் கருத்து 

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க பொதுச்செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு கூறுகையில், காரைக்கால் - பேரளம் ரயில்பாதை அமைப்புத் திட்டம் விறுவிறுப்பாக நடைபெறுவது மகிழ்ச்சி. எனினும் எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து காலம் தாழ்த்தாமல் 2025 -ஆம் ஆண்டிலேயே போக்குவரத்தை தொடங்கவேண்டும். ரயில்வே மூத்த அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் காரைக்கால் துறைமுகம் மூலம் திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும் நிலையில், காரைக்கால் பகுதியின் ரயில்வே மேம்பாட்டுக்கு நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"மயிலாடுதுறை பயணிகளுக்கு குட் நியூஸ்! நவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையம் - முழு விவரம்."
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
ஊட்டியாக மாறிய மயிலாடுதுறை! எதிரே வரும் வாகனம் கூட தெரியாத அளவிற்கு பெய்த கடும் பனி..!
ஊட்டியாக மாறிய மயிலாடுதுறை! எதிரே வரும் வாகனம் கூட தெரியாத அளவிற்கு பெய்த கடும் பனி..!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
Embed widget