மேலும் அறிய

குறைந்த வட்டியில் அதிக கடன்.. அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க..

தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் மயிலாடுதுறையில் டிச. 19-ஆம் தேதி  நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்கள் சுய வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கடனுதவிகள் வழங்கப்படுவதை எளிமையாக்கும் வகையிலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிசம்பர் 19, 2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பு 'லோன் மேளா' நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

கடன்கள் எதற்கு?

சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளுக்காக இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
முக்கியமாகச் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள்:

 * தனிநபர் கடன்

 * சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்

* விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன்)

 * கல்விக் கடன்

திட்டங்கள் 1 மற்றும் 2: வருமான உச்சவரம்பு

சிறுபான்மையின மக்களுக்கான இந்தக் கடன் திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக, அதாவது திட்டம் 1 மற்றும் திட்டம் 2 எனப் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. கடனின் அதிகபட்ச அளவு மற்றும் வட்டி விகிதங்கள் இந்தத் திட்டங்களின் கீழ் மாறுபடுகின்றன.

திட்டம் 1 : கிராமப்புறம்/நகர்ப்புறம் ரூ. 3,00,000/- வரை ஆண்டு வருமானம் 

திட்டம் 2 : கிராமப்புறம்/நகர்ப்புறம் ரூ. 8,00,000/- வரை (திட்டம் 1-ன் கீழ் பயன்பெற முடியாத நபர்கள்) ஆண்டு வருமானம் 

வட்டி விகிதங்கள் மற்றும் கடனின் உச்சவரம்பு

தனிநபர் கடன்: திட்டம் 1, பொது  6% வட்டி விகிதத்தில் ரூ. 20,00,000 கடன்  

தனிநபர் கடன் : திட்டம் 2 , ஆண்களுக்கு 8% வட்டி விகிதம் பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் ரூ. 30,00,000 கடன் 

கைவினைக் கலைஞர் கடன்: திட்டம் (விராசாத்) ஆண்களுக்கு 5% , பெண்கள் 4% வட்டி விகிதத்தில் ரூ. 10,00,000 கடன் உதவி

சுய உதவிக் குழு கடன் : திட்டம் 1  நபர் ஒருவருக்கு 7% வட்டி விகிதம் ரூ. 1,00,000

சுய உதவிக் குழு கடன் : திட்டம் 2  ஆண்கள் 10%  வட்டி விகிதத்திலும்,
பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் ரூ. 1,50,000 கடன்

கல்விக் கடன் உதவிகள்

சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்குக் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

 * திட்டம் 1-ன் கீழ்: 3% வட்டி விகிதத்தில், அதிகபட்சமாக ரூ. 20,00,000/- வரை.

 * திட்டம் 2-ன் கீழ்:
* மாணவர்களுக்கு 8% வட்டி விகிதத்திலும்

* மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும்,

* அதிகபட்சமாக ரூ. 30,00,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

விராசாத் கடன் திட்டம்: கைவினைக் கலைஞர்களுக்குச் சிறப்புச் சலுகை
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்கள், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'விராசாத்' (கைவினைக் கலைஞர் கடன் திட்டம்) மூலம் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெறலாம். இந்தக் கடன் மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் அல்லது இயந்திரங்கள் வாங்குவதற்கு வழங்கப்படுகிறது.

லோன் மேளாவில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
இந்தக் கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் சிறுபான்மையின மக்கள், 19.12.2025 அன்று நடைபெறவிருக்கும் லோன் மேளாவில் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.

பொதுக் கடன்களுக்கான ஆவணங்கள் (தனிநபர், சுய உதவிக் குழு, விராசாத்)

 * சிறுபான்மையினர் மதச் சான்றிதழ்

 * சாதிச் சான்றிதழ்

 * வருமானச் சான்றிதழ்

* உணவு பங்கீட்டு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ்

 * ஆதார் அட்டை

 * திட்ட அறிக்கை

 * வங்கிகள் கோரும் தேவையான பிற ஆவணங்கள்

கல்விக் கடனுக்கான ஆவணங்கள்

 * சிறுபான்மையினர் மதச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் நகல்

 * வருமானச் சான்றிதழ் நகல்

 * இருப்பிடச் சான்றிதழ் நகல்

 * குடும்ப அட்டை / வாழ்விடச் சான்று (Smart Card) நகல்

 * ஆதார் நகல்

 * பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்

 * உண்மைச் சான்றிதழ் அசல் (Bonafide Certificate)

* கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது (அசல்)

 * மதிப்பெண் சான்றிதழ் நகல்

 * வங்கி கோரும் இதர ஆவணங்கள்

அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இந்தச் சிறப்பான கடனுதவித் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,  கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
யார் அந்த 8 பேர்? நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு!
யார் அந்த 8 பேர்? நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
அரசு தரும் ரூ.1 கோடி பரிசு… ஆனால், நிபந்தனை இதுதான்! மயிலாடுதுறை ஆட்சியரின் பலே அறிவிப்பு.
அரசு தரும் ரூ.1 கோடி பரிசு… ஆனால், நிபந்தனை இதுதான்! மயிலாடுதுறை ஆட்சியரின் பலே அறிவிப்பு.

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget