மேலும் அறிய

மயிலாடுதுறை மக்களே அலர்ட்! ஜூலை 8-ல் மின்சார குறைதீர் கூட்டம் - எதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் தெரியுமா?

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 8 -ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 8 -ம் தேதி நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மயிலாடுதுறை மின் வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளர் பொறிஞர் S.சாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர கூட்ட அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த நிலையில் அதன் காரணமாக மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை கோட்ட மின் நுகர்வோர்களுக்கு வசதியாக, இனிவரும் காலங்களில் நிலையான ஒரு நடைமுறையை மின் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை அன்று மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்தக் குறை தீர்க்கும் கூட்டம் முறையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மாதந்தோறும் உரிய அதிகாரியைச் சந்தித்துத் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை 

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.

ஜூலை 8-ல் குறைதீர் கூட்டம் 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வருகின்ற 08.07.2026 புதன்கிழமை அன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

மனுவாக குறைகள் 

இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து மின்வாரியம் தொடர்பான குறைகளை சரி செய்துகொள்ளுமாறு மயிலாடுதுறை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் S.சாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கவனத்திற்கு

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் அனைவரும் நேரில் கலந்துகொள்ளலாம்.

* புதிய மின் இணைப்பு கோருதல்.

* மின் அழுத்தக் குறைபாடுகள் குறித்த புகார்கள்.

* பழுதடைந்த மின் கம்பங்கள் அல்லது மின் மாற்றிகளை (Transformer) மாற்றுதல்.

* மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகள்.

* பெயர் மாற்றம் மற்றும் இதர மின் வாரியம் சார்ந்த குறைகளைத் தெரிவித்தல்.

மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் மனுக்களை மேற்பார்வை பொறியாளரிடம் நேரடியாகச் சமர்ப்பித்து, அதற்குரிய பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு மின்வாரியச் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மக்களே அலர்ட்! ஜூலை 8-ல் மின்சார குறைதீர் கூட்டம் - எதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் தெரியுமா?
மயிலாடுதுறை மக்களே அலர்ட்! ஜூலை 8-ல் மின்சார குறைதீர் கூட்டம் - எதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் தெரியுமா?
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!
மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Grand Vitara Hybrid: மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
Chennai Power Cut: சென்னையில ஜூலை 6-ம் தேதி (06.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 6-ம் தேதி (06.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Embed widget