மேலும் அறிய

புண்ணிய நதிகளின் பாவத்தைப் போக்கும் காவிரி துலா உற்சவம்: நாளை கடை முழுக்கு தீர்த்தவாரி! அறிய தகவல்கள்..!

பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை கடைமுழுக்கு தீர்த்தவாரி நாளை மதியம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

காவிரி துலாக்கட்டம்

பாவங்களைப் போக்கும் நதியாக போற்றப்படுவது கங்கை நதி. அப்படி தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் பக்தர்கள் புனித நீராடியதால் நதி முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதேபோன்று புண்ணிய நதிகள் அனைத்தும் இங்கு நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாகவும் வரலாறு.

பார்வதிதேவியை சபித்த சிவபெருமான் 

மேலும், சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்ததாகவும் வரலாறு.

ரிஷப தீர்த்தம் என்ற மற்றொரு பெயர் 

இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க மயிலாடுதுறையின் நகரின் மையப்பகுதியில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது மிகவும் விசேஷம். இங்கு காவிரிக்கு, ரிஷப தீர்த்தம் எனப்பெயர். நந்திதேவருக்கு ஒருசமயம் அகம்பாவம் வந்துவிட்டது. அதை அறிந்த சிவபெருமான், நந்திதேவரைப் பாதாளத்தில் அழுத்தினார். அப்படி நந்தி தேவர் அழுத்தப்பட்ட இடம், மயிலாடுதுறை. இந்த காவிரியின் துலாக் கட்டமாகும். அந்த இடத்தின் நடுவில் இருக்கும் சுவாமியின் திருவடிவை இன்றும் காணலாம். ரிஷப தேவர் அழுந்திய இடம் ஆதலால், அது ரிஷப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி,லெட்சுமி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருவதாகவும், ஆகையால் துலா மாதம் என சொல்லப்படும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். 

கடை முழுக்கு

ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கின்ற மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர். அதனால் துலா ஸ்நானம் பாவம், துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் தேதி முடிய இங்கு நீராடுவது, மிகவும் விசேஷம். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவது மிக சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30-ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முடவன் முழுக்கு

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு” என்று கொண்டாடப்படுகிறது. துலா மாத நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தை போக்க முடவன் ( மாற்றுத்திறனாளி) ஒருவர் மயிலாடுதுறைக்கு வந்தார். தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு உரிய காலத்தில் வரமுடியாமல் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் வந்துள்ளார். முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவர் முறையிட்ட, சிவபெருமான் ‘’நீ போய் மூழ்கு" உனக்கும் பேறு கிடைக்கும்’’ என்று அருள் செய்ததாகவும், அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று புனித நீராடி முக்தி பெற்றுள்ளார்.

அதுவே ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது. இதேபோல் கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியர் மாயூரம் வருவதற்குள் 30-ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் சிவனை வேண்டி காவிரி துலா கட்டத்தில் தங்கிய நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

இந்த புராண வரலாறு நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் துலா உற்சவமாக கொண்டாடி வருகின்றனர். அந்த நாட்களில் பக்தர்கள் துலா கட்டத்தில் உள்ள காவிரியில் மூழ்கி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ளும் நிகழ்வாக இங்கு நடைபெற்று வருகிறது.இங்கு நீராடுவது காசிக்கு நிகராகவும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கடைமுக துலாகட்ட தீர்த்தவாரி நாளையதினம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது. 

மேலும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து புனித நீராடுவார்கள் என்பதால் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget