தைவான் காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய மக்கள்
சீர்காழியில் ஓளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு காதல் ஜோடி இந்து முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டனர்.
சீர்காழியில் ஓளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு காதல் ஜோடி இந்து முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். 18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், மேலும் இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் மிக்க காரைமேடு சித்தர்பீடத்தில் இன்று தைவான் நாட்டை சேர்ந்த யோங் ச்சென் என்ற ஆராய்ச்சியாளரும், ருச்சென் ஆசிரியர் இருவரும் இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
MS Dhoni: ஐ.பி.எல் கனவு அணி தேர்வு...தல தோனிக்கு கிடைத்த அந்த அங்கீகாரம்! விவரம் உள்ளே!
முன்னதாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இந்தியாவில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியுள்ளனர். அதனை அடுத்து இந்தியா வந்துள்ள இருவரும் தமிழ் முறைப்படி ஒளிலாயத்தில் இன்று அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.
Vanangaan Teaser: சர்ச்சையை கிளப்ப தயாரான பாலா.. அருண் விஜய்யின் “வணங்கான்” டீசர் இதோ!