மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (31.01.26): மின் கம்பிகளுக்கான ‘மெடிக்கல் செக்கப்’: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் மின்தடை!

Mayiladuthurai Power Shutdown 31.01.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மயிலாடுதுறை: நவீன உலகில் மின்சாரம் இன்றி ஒரு நிமிடம் கூட இயங்க முடியாது என்ற நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளைய தினம் சனிக்கிழமை (31.01.2026) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை காலை முதல் மாலை வரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணியின் அவசியம்

பொதுவாக, துணை மின் நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் (Transformers), உயர் அழுத்தக் கம்பிகள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் தொடர்ந்து இயங்குவதால் அவற்றில் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் உப்புக்காற்றின் தாக்கத்தால் மின் கம்பிகளில் அரிப்பு ஏற்படக்கூடும். இவற்றைச் சரிசெய்யவும், பழுதடைந்த பாகங்களை மாற்றவும், மின்கம்பிகள் மீது படும் மரக்கிளைகளை அகற்றவும் இந்த 'மாதாந்திரப் பராமரிப்பு' (Monthly Maintenance) மிக முக்கியமானது. இதனை முன்னெச்சரிக்கையாகச் செய்வதன் மூலம், எதிர்பாராத மின்தடை மற்றும் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்படும் பகுதிகள் எவை?

செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் சி.சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளை பணிகள் நடைபெற உள்ளன.

1. பொறையார் 110/11KV துணை மின் நிலையம்

இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது

* பொறையார்

* எருக்கட்டாஞ்சேரி

* தரங்கம்பாடி.

* சந்திரபாடி

* காட்டுச்சேரி

* ஆய்ப்பாடி

* சாத்தனூர்

* சங்கரன்பந்தல்

* தில்லையாடி

* திருவிடைக்கழி

* டி.மணல்மேடு

* கண்ணங்குடி

* மாத்தூர்

* திருக்கடையூர்

* அனந்தமங்கலம் 

* ஆணைக்கோயில்

* திருமெய்ஞானம்

* பி.பி.நல்லூர்

* மாணிக்கப்பங்கு

* பெருமாள்பேட்டை 

* குட்டியாண்டியூர்.

2.கிடாரங்கொண்டான் 110/11KV துணை மின் நிலையம்

இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் 

மின்தடை ஏற்படும் இடங்கள்

* கிடாரங்கொண்டான் 

* கருவாழக்கரை

* கஞ்சாநகரம்

* கீழையூர்

* கருவி

* ஆக்கூர்

* செம்பதனிருப்பு

* தலைச்சங்காடு 

* நத்தம்

* மடப்புரம்

* காளகஸ்திநாதபுரம்

 மற்றும்

 முடிகண்டநல்லூர்

நேரமும் கால அவகாசமும்

இந்த பராமரிப்புப் பணிகளுக்காக நாளைய தினம் சனிக்கிழமை (31.01.2026) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை பணிகள் நிறைவடைந்தவுடன் படிப்படியாக மின் விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முக்கியக் குறிப்பு

மின் கட்டமைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் காரணங்களைப் பொறுத்து இந்த மின்தடை நேரத்தில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

நாளைய தினம் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்பதால், இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, மின்சாரத்தைச் சார்ந்திருக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது பணிகளை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது. இந்தத் தற்காலிகச் சிரமம், எதிர்காலத்தில் தடையற்ற மின்சாரத்தைப் பெறுவதற்காகவே என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மின் பராமரிப்பு பணிகள் முன்னதாக முடியும் பட்சத்தில் விரைந்து மின்வாரியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"அந்த 3000 பேரும் இந்துக்கள் தான்.." பா.ஜ.க-விற்கு செக் வைத்த சாமி.நடராஜன்! கரூர் நில விவகாரத்தின் உண்மை என்ன?
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
சனீஸ்வரன் கோயில் வாசலில் தமிழக முதல்வர் விஜய்க்கு விழுந்த பாராட்டு! முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம்!
சனீஸ்வரன் கோயில் வாசலில் தமிழக முதல்வர் விஜய்க்கு விழுந்த பாராட்டு! முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget