மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (23.07.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை இந்த ஊர்களில் 8 மணி நேரம் பவர் கட்! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (23.07.2026) பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக உதவி செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக உதவி செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட கடலங்குடி மற்றும் குத்தாலம் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் நாளை (23.07.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, குறிப்பிட்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கிய ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் குத்தாலம் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தடங்கலற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில், மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாதமும் துணைமின் நிலையங்களில் சுழற்சி முறையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள், மின் மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்), உயர் அழுத்த மின்பாதைகள் மற்றும் துணைமின் நிலைய கருவிகளில் உள்ள பழுதுகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. மேலும், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதை தவிர்க்கும் வகையில் அவற்றை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்

கடலங்குடி மற்றும் குத்தாலம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் ஊர்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 * கடலங்குடி

 * வாணாதிராஜபுரம்

 * சோழம்பேட்டை

 * மாப்படுகை

 * கோழிகுத்தி

 * முருகமங்கலம்

 * திருமணஞ்சேரி

 * ஆலங்குடி மாதிரிமங்கலம்

 * தொழுதலாங்குடி

 * சேத்திராபாலபுரம்

 * அஞ்சுவார்தலை

 * வில்லியநல்லூர்

நாளை காலை 9.00 மணிக்கு தொடங்கும் இந்த பராமரிப்பு பணி, மாலை 5.00 மணி வரை இடைவிடாது 8 மணிநேரம் நடைபெறும். பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்தவுடன் மாலை 5.00 மணிக்கு மேல் மீண்டும் படிப்படியாக மின் விநியோகம் வழக்கம் போல் சீரமைக்கப்படும். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

மின் தடை காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, குடிநீர் பயன்பாடு, வணிக வளாக இயக்கங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பிற அத்தியாவசிய பணிகளை மின் தடையின் நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்

பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் மின் கம்பிகளிலோ அல்லது மின் சாதனங்களிலோ பொதுமைகளோ அல்லது திறனற்ற நபர்களோ தொட வேண்டாம் எனவும், மின் தடை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (23.07.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை இந்த ஊர்களில் 8 மணி நேரம் பவர் கட்! 
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை இந்த ஊர்களில் 8 மணி நேரம் பவர் கட்! 
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
Embed widget