Mayiladuthurai Power Shutdown (20.01.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 20.01.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Continues below advertisement

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

Saif Ali Khan: நடிகர் சயிஃப் அலி கானை குத்திய நபரை தட்டி தூக்கிய போலீசார்? சிக்கியது எப்படி? பிடிபட்டது எங்கே?


மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

Space GK: விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ்சூட் முதல் ராக்கெட்டுகள் வரை.. வெள்ளை நிறம் ஏன்? காரணம் தெரியுமா?


மணல்மேடு துணை மின்நிலையம் உதவி செயற் பொறியாளரின் செய்தி குறிப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையங்களில் நாளை 20.01.2025 திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மணல்மேடு உதவி செயற் பொறியாளர் இளையராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

நான் என்ன மிட்டா மிராசா? தொழிலதிபரா? இன்னும் 13 அமாவாசைதான் - நாள் குறித்த இபிஎஸ்

எதிர்வரும் 20-01-2025 திங்கள்கிழமை அன்று மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் 11.கி.வோ வடவாஞ்சார் உயரழுத்த மின்பாதை மற்றும் 11 கி.வோ சித்தமல்லி உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின் வினியோகம் பெறும் வடவாஞ்சார், கடக்கம், திருவாளப்புத்தூர், ரெட்டிபாளையம், பனையகுடி, குறிச்சி, சித்தமல்லி, திம்மாவரம், வேட்டையம்பாடி மற்றும் கடுவங்குடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meena: மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கினாரா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Suriya: நன்றி மறந்த சூர்யா; கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கௌத மேனன்: என்ன நடந்தது?

Continues below advertisement