திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்தி சிறப்பு வழிபாடு...!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தை மாத பூரத்தை முன்னிட்டு உற்சவர் அகோர மூர்த்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தை மாத பூரத்தை முன்னிட்டு உற்சவர் அகோர மூர்த்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

Continues below advertisement

பிரசித்தி பெற்ற சிவாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

இதையும் படிங்க: SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி


மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் குறிப்பிட்ட சில அமாவாசை அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். 

இதையும் படிங்க: Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயில்! நடப்பாண்டுக்கான பூஜை நாளை மறு நாளுடன் நிறைவு..


தனி சன்னதியில் அருள்பாலிக்கும் அகோர மூர்த்தி

இவ்வாலயத்தில் அகோர மூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான சத்தியோஜாதம் அகோர மூர்த்தியாக மாசி மாதம் பிரதமை திதி ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரத்தில் கூடிய நாளில் நெருப்பு பிழம்பு உருவில் தோன்றினர். அதனை கண்டதும் மருத்துவ சூரன் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான் பின்பு மருத்துவசூரன் சிவபெருமானிடம் தான் கண்ட ரூபத்தில் திருவெண்காடு ஸ்தலித்தில் எழுருந்தளி பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறவேற்றிதர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.


மாத பூரம் சிறப்பு வழிபாடு 

இந்நிலையில் தை மாத பூரத்தையோட்டி உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு அரிசி மாவு, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், நாட்டு சக்கரை, பழச்சாறு, விபூதி, தயிர்,பால், இளநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட மங்கள பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அகோர மூர்த்திக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola