நான் என்ன மிட்டா மிராசா? தொழிலதிபரா? இன்னும் 13 அமாவாசைதான் - நாள் குறித்த இபிஎஸ்
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

நான் என்ன மிட்டா மிராசா? தொழிலதிபரா? இன்னும் 13 அமாவாசைதான் - நாள் குறித்த இபிஎஸ்
தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மகனை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை. மகளிர் உரிமைத் தொகையை தரவே இல்லை. நாங்கள்தான் போராடி பெற்றுக்கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை தரப்பட்டது. திமுக ஆட்சிக்கு இனும் 13 அமாவாசைதான் இருக்கு.
எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசா? தொழிலதிபரா? சாதாரணத் தொண்டன். கட்சிக்கு உழைத்து விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அதிமுக” எனத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரை புகழ்ந்தால்தான் மற்றவர்கள் கட்சி நடத்த முடியும். அவர் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவை செய்து முதல்வரானார். அதிமுகவை யாவராலும் அழிக்கவும் முடியாது. முடக்கவும் முடியாது. ஒழிக்கவும் முடியாது. சட்டப்படி அதிமுக நம்மைடம் உள்ளது. யாரும் அதை பற்றி கவலைபட தேவையில்லை.
4 ஆண்டுகளாக ஸ்டாலின் என்ன செய்தார். புது அறிவிப்புகள் வெளி வராதே நாளே இல்லை. ஒரு புயல் வந்தாலே திமுக அரசு காணாமல் போய்விடும். கார் பந்தயம் தேவையா? மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக திமுக அரசு செலவு செய்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஸ்டாலின் அரசு திவால் ஆக போகிறது. 356 கோடி கடன் இருக்கிறது. எங்கே போனது அந்த பணம்? இந்த கடனால் மக்கள் மீது வரிசுமை அதிகரித்துள்ளது.
அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மக்கள் மேல் வரிமேல் வரி போடும் ஆட்சி திமுக ஆட்சி” எனத் தெரிவித்தார்.