தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் மேனன். அதே போன்று தான் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார். ஆனால், ஒரு படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். அந்தப் படம் தான் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கி தயாரித்து வரும் படம் தான் துருவ நட்சத்திரம். 2013 ஆம் ஆண்டு சூர்யாவுடன் அறிவிக்கப்பட்ட இந்தப் படம் சில மாதங்களுக்கு பிறகு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் கதைக்கு ஓகே சொன்ன சூர்யா அதன் பிறகு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அந்தப் படம் கைவிடப்பட்டிருக்கிறது. இதனால், கௌதம் மேனன் அப்செட்டில் இருந்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், சூர்யாவும் விலகியது கௌதம் மேனனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து கௌதம் மேனன் கூறியிருப்பதாவது: கதை பேசி முடிவு செய்த பிறகு தான் ஷூட்டிங்கிற்கு தொடங்கப்படும். இது சூர்யாவுக்கே தெரியும். இது போன்று உருவான படம் தான் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம்.

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்திற்கு அப்பா ரோலுக்கு நானா படேகரை முதலில் தேர்வு செய்து அவரிடம் பேசினோம். ஆனால், எனக்கு டப்பிங் இருக்கும். அது எனக்கு சரிப்பட்டு வராது. ஒவ்வொருவருக்கும் அவரவர் குரல் தான் பிளஸ். அது போன்று தான் என்னுடைய குரலும் எனக்கு பிளஸ் பாயிண்ட் என்று கூறி அப்பா ரோலுக்கு மறுத்துவிட்டார்.
அதன் பிறகு தான் சூர்யா தானாக இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்னார். அப்படி நடிச்ச சூர்யா தான் என்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இது எனக்கு ஷாக் தான். வேறு நடிகர்கள் கூட நடிக்க முடியாதுனு சொல்லலாம் . ஆனால், சூர்யா சொல்லிருக்க கூடாது. இதன் பின்னரே துருவ நட்சத்திரம் படத்தை விக்ரமை வைத்து இயக்கி முடித்தார் கெளதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவை கேரியரில் தூக்கி விட்ட இயக்குனர்களில் பாலாவுக்கு அடுத்தபடியாக இருப்பது கெத்தம் மேனன் தான். சூர்யாவின் இந்த செயல் நன்றி மறந்தது போல் இருக்கிறது என்பதை மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார்.