Space GK: விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ்சூட் தொடங்கி ராக்கெட்டுகள் வரை, வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்? என கிழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி உலகம் மர்மங்கள் நிறைந்தது. இந்த மர்மங்களை தீர்க்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது விண்வெளியில் தவித்து வருகிறார். இந்த நேரத்தில், ஜனவரி 16 அன்று, அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு விண்வெளி நடையை மேற்கொண்டார்.  அப்போது அவர் வெள்ளை விண்வெளி உடையை அணிந்திருந்தார். இப்போது கேள்வி என்னவென்றால், விண்வெளியில் உள்ள ஸ்பேஸ்சூட் முதல் விமானம் வரை அனைத்தின் நிறம் ஏன் வெண்மையாக இருக்கிறது? 

Continues below advertisement

மர்மங்கள் நிறைந்த விண்வெளி உலகம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும், விண்வெளியில் உள்ள மர்மங்களை கண்டறிய தொடர்ந்து பல முயற்சிகள முன்னெடுக்கின்றன. அந்த வகையில் விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் ஒரு சிறப்பு வகையான ஸ்பேஸ் சூட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். பல நேரங்களில் அந்த உடைகளும் வெள்ளை நிறித்தில் தான் இருக்கின்றன. இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் சில விண்வெளி வீரர்கள் ஆரஞ்சு நிற ஆடைகளையும் அணிவார்கள். ஆனால் இதற்கான காரணம் என்ன தெரியுமா? 

விண்வெளியில் வெள்ளை உடை 

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் குறிப்பாக வெள்ளை நிற உடைகளை அணிவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆனால் விண்வெளி வீரர்கள் ஏன் எப்போதும் வெள்ளை நிற உடைகளை அணிவார்கள், ஏன் மஞ்சள், நீலம் அல்லது சிவப்பு நிற உடைகளை அணிவதில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?  ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன், விண்கலத்தைத் தவிர, அந்த நபரின் எடை, உணவு மற்றும் உடைகள் தொடர்பான அனைத்திலும் விஞ்ஞானிகள் நெருக்கமாக ஆய்வு செய்கிறார்கள். இந்த பணியில் ஒரு விண்வெளி வீரரின் வெள்ளை நிற உடையும் உள்ளது. உண்மையில் வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது மற்றும் இந்த நிறம் விண்வெளியின் இருண்ட சூழலில் எளிதாக தெரியும். அதனால்தான் இந்த ஆடை விண்வெளியில் பயன்படுத்தப்படுகிறது. ஆரஞ்சு நிறமும் பிரகாசமாக இருப்பதால் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்பேஸ்சூட்டில் நீரை குளிரூட்டும் அமைப்பு உள்ளது. இது ஆக்சிஜனை உற்பத்தி செய்து விண்வெளியில் உயிர்வாழ உதவுகிறது. 

ராக்கெட் ஏன் வெள்ளையாக இருக்கிறது?

இது தவிர, விண்வெளிக்குச் செல்லும் விண்கலத்தின் நிறம் வெண்மையாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். தகவல்படி, விண்கலத்தின் நிறத்தை வெண்மையாக வைத்திருப்பதன் பின்னணியில், வெள்ளை நிறம் விண்கலத்தை வெப்பமடையாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக, ஏவுதளத்திலும், ஏவும்போதும் சூரியனின் கதிர்வீச்சு வெளிப்படுவதால் அதன் உள்ளே இருக்கும் கிரையோஜெனிக் உந்துசக்திகள் வெப்பமடைவதைத் தடுக்க அதன் நிறம் வெண்மையாகவே வைக்கப்படுகிறது. இதேவிளைவின் காரணமாக தான், கடும் வெயிலில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் போது கூட கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை நிறை ஆடைகளை அணிகின்றனர். அதாவது வெள்ளி நிறம் சூட்டை உள்வாங்காமால் வெளியே சிதறடிக்கிறது.