Mayiladuthurai Power Shutdown (12.05.2026) : இங்கெல்லாம் நாளை மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க..!
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் துணை மின் நிலையத்தில் நாளை (மே 12) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை செய்யபடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் துணை மின் நிலையத்தில் நாளை (மே 12) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை செய்யபடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். அந்தவகையில் நாளை மின் நிறுத்தம் நடைபெற உள்ளது.
மின்வாரிய செய்திக்குறிப்பு
மயிலாடுதுறை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீடூர் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள முக்கியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (செவ்வாய்கிழமை) இப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் M.விஜயபாரதி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மின்தடை ஏற்படும் நேரம்
மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட நீடூர் துணை மின் நிலையத்தில் நாளைய தினம் 12.05.2026 (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அனைத்துப் பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடையால் பாதிக்கப்படும் பகுதிகள்
நீடூர் துணை மின் நிலையத்தின் மூலம் மின் வசதி பெறும் கீழ்க்கண்ட முக்கிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின்சாரம் இருக்காது.
* நீடூர்
* மல்லியக்கொல்லை
* தாழஞ்சேரி
* கொற்கை
* அருண்மொழிதேவன்
* கங்கணம்புத்தூர்
* மேலாநல்லூர்
* நடராஜபுரம்
* வில்லியநல்லூர்
* கொண்டல்
* பாலாக்குடி
* மணலூர்
* கீழமருதாந்தநல்லுர்
* மேலமருதாந்தநல்லூர்
* பொன்மாசநல்லுர்
* மாப்படுகை
* ஆனந்தக்குடி
* சோழப்பேட்டை
இந்தக் குறிப்பிட்ட கிராமங்கள் மட்டுமன்றி, இவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட அனைத்துச் சிற்றூர் மற்றும் விவசாயப் பகுதிகளிலும் மின்தடை அமலில் இருக்கும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகளின் அவசியம்
துணை மின் நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் (Transformers), உயர்மின் அழுத்தக் கம்பிகள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால், அவை இந்தப் பராமரிப்புப் பணியின் போது சரிசெய்யப்படும். குறிப்பாக, மின்கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் காப்புகளை (Insulators) மாற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் திடீர் மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது என்பதால், இப்பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மின் ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடும்போது மின் இணைப்புகளைத் தானாகச் சீரமைக்க முயல வேண்டாம் என்றும், பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்புப் பணிகள் திட்டமிட்டபடி மாலை 5 மணிக்குள் நிறைவடைந்தவுடன், மீண்டும் மின் விநியோகம் வழக்கம்போலத் தொடங்கும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























