மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (07.01.2025) :சீர்காழி கோட்டத்தில் நாளை மின்வெட்டு... தனி நபர்களுக்கு கொண்டாட்டம்... பொதுமக்களுக்கு திண்டாட்டம்...

Mayiladuthurai Power Shutdown 07.01.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (புதன்கிழமை) சீர்காழி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

பத்திரிகை செய்தி 

இது குறித்து சீர்காழி (தெற்கு) உதவி செயற்பொறியாளர் மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் 110/33-11 கி.வோ துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர் வெளியிட்டுள்ள தனித்தனி செய்திக்குறிப்புகளில் தெரிவித்துள்ளதாவது:

மின்தடை நேரம் மற்றும் காரணம்

சீர்காழி கோட்டத்தில் அமைந்துள்ள 33/11 கி.வோ எடமணல் துணை மின் நிலையம் மற்றும் 110/33-11 கி.வோ வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையம் ஆகியவற்றில் நாளை 07.01.2026 (புதன்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்

1.வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்

வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் சீர்காழி நகரத்தின் பெரும்பகுதி மற்றும் முக்கிய கிராமங்களில் மின்தடை இருக்கும்.

* வைத்தீஸ்வரன்கோவில்

* சீர்காழி நகரம் முழுவதும்

* புங்கனூர்

* சட்டநாதபுரம்

* மேலச்சாலை

* கதிராமங்கலம்

* ஆத்துக்குடி

* திருப்புன்கூர்

* தென்பாதி

* பனமங்கலம்

* கோவில்பத்து

* கொள்ளிடம் முக்கூட்டு

* விளந்திட சமுத்திரம்

* புளிச்சக்காடு

* கற்பகம் நகர்

* புதிய பேருந்து நிலையம்

* பழைய பேருந்து நிலையம்

மற்றும் அதனைச் சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதிகள்.

2.எடமணல் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்:

எடமணல் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 * திட்டை

* செம்மங்குடி

* கடவாசல்

* எடமணல்

* திருக்கருக்காவூர்

* திருமுல்லைவாசல், 

* வேட்டங்குடி

* தொடுவாய்

* திருநகரி 

மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள்

முக்கிய அறிவிப்பு

மேற்கண்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது வானிலை மாற்றம் அல்லது மின் கட்டமைப்பு சார்ந்த இதர தொழில்நுட்பக் காரணங்களால் மின்தடை நேரத்தில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இந்த மின் நிறுத்தத்திற்கு மின்வாரிய ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு உதவி செயற்பொறியாளர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தனி நபர்களுக்கான மின்நிறுத்தம் 

மேலும், மாதாந்திர மின் பராமரிப்பு பணி என்ற பெயரில் எடமணல் துணை மின் நிலைய பகுதிகளில் அறிவித்துவிட்டு, அன்றை தினம் அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள், வீட்டு மனை, போன்றவற்றிக்கு புதிய மின்கம்பம் நடுதல், அவர்களுக்கான மின்மாற்றியை பழுது நீக்கம் என தனியார் நபர்களுக்கு சாதகமான தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இதனால் இப்பகுதி முறையாக மாதாந்திர மின் பராமரிப்பு செய்யாமல் நாள்தோறும் அதிகளவிலான மின்வெட்டால் இப்பகுதி மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Embed widget