மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (10.02.2026) :இன்று மின் தடை! முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்..பொதுமக்கள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் (10.02.2026) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் மின் கட்டமைப்பு மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று 2026 பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட இரண்டு மிக முக்கியமான துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது குறித்து மயிலாடுதுறை நகர உதவி செயற்பொறியாளர் அப்துல் வாஹப் மரைக்காயர் மற்றும் விஜயபாரதி உதவி செயற்பொறியாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பராமரிப்பு பணிகளின் அவசியம்

மின் இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளைத் தடுத்தல், உயர் அழுத்த மின் கம்பிகளில் உராய்ந்து கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றுதல், மின்மாற்றிகளில் (Transformers) எண்ணெய் அளவை சரிபார்த்தல் மற்றும் பழுதடைந்த மின் உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் இந்த மாதாந்திர பராமரிப்பின் போது மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வரும் காலங்களில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை நேரம் மற்றும் இடங்கள்

இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பணிகள் நடைபெறும் என்பதால், சுமார் 8 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீடூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்

நீடூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால், அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் நகர எல்லையோரப் பகுதிகள் பாதிக்கப்படும். 

அதன் விவரம்

முக்கிய இடங்கள்: 

* நீடூர்

* மல்லியக்கொல்லை

* வில்லியநல்லூர்

* கொண்டல்

* பாலக்குடி

* தாலஞ்சேரி 

* கொற்கை.

* அருண்மொழிதேவன்

* கங்கணம்புத்தூர்

* மேலாநல்லூர்

* நடராஜபுரம்

* கீழமருதாந்தநல்லூர்

* மேலமருதாந்தநல்லூர் 

* பொன்வாசநல்லூர்

* மாப்படுகை

* ஆனந்தக்குடி 

* சோழப்பேட்டை

* மணலூர் 

ஆகிய ஊர்களுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நாளை மின் விநியோகம் இருக்காது.

மயிலாடுதுறை (பேச்சாவாடி) துணை மின் நிலைய பகுதிகள்

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதிகள் மற்றும் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகள் இந்த துணை மின் நிலையத்தின் கீழ் வருகின்றன.

நகரப் பகுதிகள்: 

* மயிலாடுதுறை நகரின் பிரதான பகுதிகள்

* பட்டமங்கல தெரு

* மகாதான தெரு

* பெரிய கடைத்தெரு 

 * கூறைநாடு

சுற்றுவட்டாரப் பகுதிகள்: 

 * மூவலூர் 

* சித்தர்காடு

* அரையபுரம்

* மறையூர்

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை

* இதர கிராமங்கள்: 

* அன்னவாசல்

* இளையானூர்

* அரங்ககுடி

* செறுதியூர்

* குளிச்சார் மற்றும்

மங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்

இந்த நீண்ட நேர மின்தடை காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளான குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவது போன்ற பணிகளை காலை 9 மணிக்கு முன்னதாகவே முடித்துக்கொள்ளவது, மின்தடை நேரத்தில் மின் சாதனங்களின் ஸ்விட்சுகளை அணைத்து வைப்பது, மின்சாரம் மீண்டும் வரும்போது ஏற்படும் திடீர் அழுத்த மாறுபாடுகளில் இருந்து உபகரணங்களைப் பாதுகாக்கும்.

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், கணினி மையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த நேர மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

நிர்வாகக் குறிப்பு

மின்வாரிய அறிவிப்பின்படி, இந்த பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்ட கால அவகாசத்திற்குள் முடிக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு முன்னதாகவே பணிகள் நிறைவடைந்தால் உடனடியாக மின் விநியோகம் சீர் செய்யப்படும். இருப்பினும், நிர்வாகக் காரணங்களினாலோ அல்லது காலநிலை மாற்றங்களினாலோ பணிகளில் தாமதம் ஏற்பட்டால், மின் விநியோகம் மீண்டும் தொடங்குவதில் சிறிய காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மின்நிறுத்தம் வாபஸ் பெறவும் வாய்ப்புகள் உண்டு. பொதுமக்கள் இந்த மின் பராமரிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget