மேலும் அறிய

மயிலாடுதுறையில் தொடரும் குண்டாஸ்... இன்று இருவர் குண்டாஸில் கைது..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கஞ்சா மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு முக்கிய நபர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் (தடுப்புக் காவல் சட்டம்) கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா வியாபாரி கைது மற்றும் பின்னணி

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி (01.08.2026) மயிலாடுதுறை நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறை திருவிழந்தூர், தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகனான ஆகாஷ் (எ) மணிகண்டன் (23) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தின் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

சட்டவிரோத மதுபான விற்பனையில் கைதானவர்

இதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான ஆகஸ்ட் இரண்டாம் தேதி (02.08.2026) மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் மணல்மேடு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பூதங்குடி ஆண்டவர் நகரைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மகனான சிவா (எ) தொப்பி சிவா (29) என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மணல்மேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு எதிரி சிவா நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு

கைது செய்யப்பட்ட ஆகாஷ் (எ) மணிகண்டன் மற்றும் சிவா (எ) தொப்பி சிவா ஆகிய இருவரும் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம் ஒழுங்கிற்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து சமூக அமைதியைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டும் இவ்விருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், நேற்று (27.08.2026) எதிரிகள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் இன்று (28.08.2026) இரு எதிரிகளும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடப்பாண்டில் 45 நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் இதுவரை கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 13 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 9 நபர்கள், கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 15 நபர்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் என மொத்தம் 45 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது எவ்விதத் தாட்சணியமுமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகளே ரெடியா? மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 29-ல் தொடக்கம்!
மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகளே ரெடியா? மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 29-ல் தொடக்கம்!
பழைய வண்டி... அதே கெத்து! காரைக்காலில் ஆயுதபூஜையில் அதகளம் செய்த RX 100 பைக் பேரணி!
பழைய வண்டி... அதே கெத்து! காரைக்காலில் ஆயுதபூஜையில் அதகளம் செய்த RX 100 பைக் பேரணி!
பட்டணப் பிரவேச பல்லக்குகள் முதல் உழவுக் கருவிகள் வரை: தருமபுரம் ஆதீனத்தில் விமரிசையாக நடந்த ஆயுத பூஜை வழிபாடு!
பட்டணப் பிரவேச பல்லக்குகள் முதல் உழவுக் கருவிகள் வரை: தருமபுரம் ஆதீனத்தில் விமரிசையாக நடந்த ஆயுத பூஜை வழிபாடு!
கங்கைநதியின் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டம் : மயிலாடுதுறை துலா உற்சவ சிறப்புகள் இதுதான்..!
கங்கைநதியின் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டம் : மயிலாடுதுறை துலா உற்சவ சிறப்புகள் இதுதான்..!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget