மேலும் அறிய

சீர்காழி அருகே பரபரப்பு: பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் மீது கதண்டு வண்டுகள் கொடூரத் தாக்குதல்! 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கதண்டு வண்டுகள் நடத்திய கொடூரத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இன்று எதிர்பாராதவிதமாக திடீர் என நடந்த கதண்டு வண்டு தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. சீர்காழி அடுத்த வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் தங்களது அன்றாடப் பணிகளுக்காகவும் கல்வி பயில்வதற்காகவும் வழக்கம்போல் சீர்காழி கோயில்பத்து பகுதி வந்துள்ளனர்.

அதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் சீர்காழி நகரை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தனர். காலை நேரப் பணியின் காரணமாக அந்தச் சாலை எப்போதும்போல பரபரப்பாகக் காணப்பட்டது.

கலைந்த கதண்டு வண்டுகள் கூடும், திடீர் தாக்குதலும்

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஊம மதகு என்ற குறிப்பிட்ட பகுதியில் சாலையோரமாக இருந்த பெரிய புளியமரத்தில் இருந்து கதண்டு வண்டுகளின் கூடு திடீரென எதிர்பாராதவிதமாக கலைந்தது.‌ இதனால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான கதண்டு வண்டுகள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாய்ந்து கொட்டத் தொடங்கின. 

எங்கு பார்த்தாலும் வண்டுகள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியதால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். திடீரென நிகழ்ந்த இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் கடுமையான பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

படுகாயமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விவரம்

கதண்டு வண்டுகள் கொட்டியதில் முகம், கை, மற்றும் உடல் முழுவதும் பலத்த குத்துக்காயங்கள் ஏற்பட்டு கடும் வலியால் துடித்து கதறி மாணவர்கள் உட்பட பலரும் அழுதனர். இந்தத் தாக்குதலில் ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆதேஷ் (வயது 13), வள்ளுவக்குடி பகுதியைச் சேர்ந்த தரனேஷ் (வயது 12) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி (வயது 15) ஆகிய பள்ளி மாணவர்களும், பொதுமக்களான பாலகுமார் (வயது 44), கலையரசன் (வயது 48) உள்ளிட்ட மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். கடுமையான விஷத்தன்மை கொண்ட கதண்டு வண்டுகளின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் வலியால் சுருண்டு விழுந்தனர்.

சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைக் கடந்தவர்கள் ஆபத்தான நிலையில் வலியால் துடித்த மாணவர்களையும் பொதுமக்களையும் மீட்டுத் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக அவர்கள் அனைவரும் 108 அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை வழங்கினர். தொடர்ந்து விஷம் உடல் முழுவதும் பரவாமல் இருக்கவும், வலி நிவாரணம் பெறவும் அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அச்சமும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும்

பள்ளிக்குச் சென்ற மாணவச் செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கதண்டு வண்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ள இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்களில் இதுபோன்று ஆபத்தான முறையில் வண்டுகள் கூடு கட்டியிருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் செல்லும் வழிகளில் உள்ள மரங்களை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற கதண்டு வண்டு கூடுகளை உடனடியாக பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உஷார் நிலையில் 14 காவல் நிலையங்கள்.. ஏன் தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உஷார் நிலையில் 14 காவல் நிலையங்கள்.. ஏன் தெரியுமா..?
ரோடு எங்கே இருக்கிறதென்றே தெரியலை..! மழையால் தீவுபோல் மாறிய கிராமம்..!
ரோடு எங்கே இருக்கிறதென்றே தெரியலை..! மழையால் தீவுபோல் மாறிய கிராமம்..!
மக்களே உஷார்! கரண்ட் ஷாக் விபத்துகளில் இருந்து தப்பிக்க மின்வாரியம் தரும் 12 சூப்பர் டிப்ஸ் இதுதான்..
மக்களே உஷார்! கரண்ட் ஷாக் விபத்துகளில் இருந்து தப்பிக்க மின்வாரியம் தரும் 12 சூப்பர் டிப்ஸ் இதுதான்..
சீர்காழியில் பரபரப்பு.. இட்லிக்கடைகாரரிடம் கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள், சாமி சிலைகள் பறிமுதல்!
சீர்காழியில் பரபரப்பு.. இட்லிக்கடைகாரரிடம் கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள், சாமி சிலைகள் பறிமுதல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget