மேலும் அறிய

வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… அத்துமீறிய வாலிபர்... காத்திருந்த பேரதிர்ச்சி..! 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து கடலூர் மத்திய சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட நபரை மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்த விவரம்

மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்த சமயத்தைப் பயன்படுத்தி, ஒருவர் அத்துமீறி நுழைந்து அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இச்சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தரங்கம்பாடி தாலுக்கா, ஓடக்கரை, ரயிலடி தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சங்கர் (31) என்பவர்தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வி குற்றவாளி சங்கர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ (POCSO - 2012) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வந்த காவல் ஆய்வாளர், எதிரி சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தார்.

குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட எதிரி சங்கரின் தொடர் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சமுதாய அமைதியைப் பேணும் வகையிலும், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக உரிய ஆதாரங்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முறைப்படி பரிந்துரை செய்தார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு & சிறையில் அடைப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையையும், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், குற்றவாளி சங்கரைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) சிறையில் அடைக்க அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வி தலைமயிலான காவல் ஆளிநர்கள், குற்றவாளி சங்கரை (31) கடலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கையை நிறைவு செய்தனர்.

நடப்பாண்டில் 55 நபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பாக அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டில் இதுவரை கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த 18 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 9 நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 19 நபர்கள், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் உட்பட மொத்தம் 55 நபர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி-யின் கடுமையான எச்சரிக்கை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் அனைத்து நபர்களின் செயல்பாடுகளும் காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது‌. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள், மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாரான அதிகாரிகளின் மாஸ்டர் பிளான் இதுதான்...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாரான அதிகாரிகளின் மாஸ்டர் பிளான் இதுதான்...
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
ரயில் பயணிகள் கவனத்திற்கு! அக்டோபர் 18-ல் முக்கிய ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
ரயில் பயணிகள் கவனத்திற்கு! அக்டோபர் 18-ல் முக்கிய ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Embed widget