மேலும் அறிய

2026 வரை பழைய பங்காளி சண்டைகளுக்கு இடைவெளி - டிடிவி தினகரன் 

திமுகவை வீழ்த்துவதற்காக பழைய பங்காளி சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு கூட்டணியில் ஒன்றாக செயல்பட்டு, அதன்பிறகு எங்கள் பங்காளி சண்டையை தொடர்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. 

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், "இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்காக திமுகவை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம். 

2026 வரை பழைய பங்காளி சண்டைகளுக்கு இடைவெளி - டிடிவி தினகரன் 

திமுக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்து அமைச்சராக இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பொன்முடி பெண்களைப் பற்றி இழிவாக பேசியதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது. துரைமுருகனை விடுதலை செய்தது தவறு என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. 

சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு 

திமுக ஆட்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயப்படுவதற்கான காலமாக உள்ளது. ஏனெனில், பட்டிதொட்டி எல்லாம் போதை கலாச்சாரம், போதை சாக்லேட், போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கூலிப்படைகளின் ஆதிக்கத்தால் 5000-க்கும், பத்தாயிரத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொலை செய்கின்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. 

2026 வரை பழைய பங்காளி சண்டைகளுக்கு இடைவெளி - டிடிவி தினகரன் 

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயிலும் நிறைவேற்றாமல் திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் மக்களுக்கு நிம்மதி வரும் என்றார். டெல்டா மாவட்டங்களில் பருவம்தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு, 2026 மார்ச் மாதத்துக்கு பிறகு மக்களாட்சி அமைந்த பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும். 

அமமுகவின் இலக்கு

திமுக தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்போம் என்று சொன்னார்கள். அதற்கெல்லாம் போராட்டம் நடத்தியவர்கள் இன்று ஆட்சிக்கு வந்த பிறகு எல்லோரையும் மறந்துவிட்டார்கள். இதற்கெல்லாம் பொதுமக்கள் தக்க பதிலடி தருவார்கள். இன்றைக்கு ஒரே இலக்கு திமுக என்ற தீயசக்தியை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும், திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளோம். திமுகவை வீழ்த்துவதற்காக பழைய பங்காளி சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு கூட்டணியில் ஒன்றாக செயல்படலாம். அதன்பிறகு எங்கள் பங்காளி சண்டையை தொடர்வோம் என்பது எங்கள் நிலைப்பாடு. ஓபிஎஸ் ஒதுக்கப்படவில்லை. அவரின் இடம் அப்படியே உள்ளது. அவரை நாங்கள் கைவிட மாட்டோம்.

2026 வரை பழைய பங்காளி சண்டைகளுக்கு இடைவெளி - டிடிவி தினகரன் 

திருமாவளவன் மீது விமர்சனம் 

திருமாவளவன் தினந்தோறும் ஒரு தகவல் சொல்லி வருகிறார். நேற்று என்ன சொன்னோம், இன்று என்ன சொன்னோம் என்று அவருக்கே தெரியவில்லை. காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்கிறார். விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தில் 66 பேர் பலியான விவகாரத்தில் பட்டியலின மக்களுக்காக போராடும் திருமாவளவன் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சொல்லவில்லை. திருமாவளவனின் போக்கு வித்தியாசமாக போய்க்கொண்டு உள்ளது” என்றார்.

இந்நிகழ்வில், மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் பொன்.பாரிவள்ளல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
பயிர் இழப்பில் இருந்து தப்பிக்க சூப்பர் வாய்ப்பு! மயிலாடுதுறையில் 235 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பு!
பயிர் இழப்பில் இருந்து தப்பிக்க சூப்பர் வாய்ப்பு! மயிலாடுதுறையில் 235 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பு!
Mayiladuthurai Power Shutdown (09.07.2026) : மயிலாடுதுறை மக்களே அலர்ட்! நாளை 8 மணி நேரம் இந்த பகுதிகளில் பவர் கட்! உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க!
Mayiladuthurai Power Shutdown (09.07.2026) : மயிலாடுதுறை மக்களே அலர்ட்! நாளை 8 மணி நேரம் இந்த பகுதிகளில் பவர் கட்! உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget