மேலும் அறிய

ஸ்...அப்பா என்னா வெயிலு....பருவநிலை மாற்றத்தால் முன்னதாகவே ஏற்ப்பட்ட வெப்பத்தின் தாக்கம் - அட்வைஸ் சொன்ன ஆட்சியர்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெப்ப அலை வீசுவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெப்ப அலை வீசுவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொளி காட்சி வாயிலாக உயர் அலுவலர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் 

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு தெரிவித்ததாவது: வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவைகள், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.  

வீட்டுக்குள் பாதுகாக்க இருக்க வேண்டும்

தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லெஸ்ஸி, புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பை தவிர்க்கவும். பருவக்கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாக்க இருக்க வேண்டும். 

மருத்துவரை அணுக வேண்டும் 

நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும்போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் (கருப்பு நிறத்தை தவிர்த்து) பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான வழிமுறைகள்

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

முதியவர்களுக்கான வழிமுறைகள்

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கான குறிப்புகள்

கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்ல பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக்கூடாது. குப்பைகள், நிலத்தில் உள்ள விவசாய சார்ந்த கழிவு பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

மின்சார சார்ந்த எச்சரிக்கை 

மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு, கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரைவீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும், மாடிவீடுகளில் மேல்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் வியக்கவைக்கும் வரலாற்று அதிசயம்: விண்கலத் தொழில்நுட்பமா? 2600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் 17-ஆம் நூற்றாண்டு குர்ஆன் பெட்டி..! 
மயிலாடுதுறையில் வியக்கவைக்கும் வரலாற்று அதிசயம்: விண்கலத் தொழில்நுட்பமா? 2600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் 17-ஆம் நூற்றாண்டு குர்ஆன் பெட்டி..! 
"சாமி சிலைகளோடு வந்த சொகுசு கார்.." - பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள்; பின்னணி என்ன?
பலத்த பாதுகாப்புடன் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்! மயிலாடுதுறை மாவட்டத்தின் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் எது தெரியுமா..?
பலத்த பாதுகாப்புடன் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்! மயிலாடுதுறை மாவட்டத்தின் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் எது தெரியுமா..?
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
Embed widget