மேலும் அறிய
Advertisement
Railway: செகந்திராபாத் - இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே வாராந்திர சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு!
இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 4) காலை 8 மணிக்கு துவங்கியது.
செகந்திராபாத் - இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென்மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி செகந்திராபாத் இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) ஜனவரி 4 முதல் ஜனவரி 25 வரை புதன்கிழமைகளில் இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) ஜனவரி 6 முதல் ஜனவரி 27 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு இன்று (ஜனவரி 4) காலை 8 மணிக்கு துவங்கியது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க - விளையாட்டுத் துறைக்கு இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு - செல்லூர் ராஜூ பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க - ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூச அனுமதிக்க வேண்டும் - உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion