மேலும் அறிய

விருதுநகரில் கனிம வளக் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி? - 24 மணி நேர சிறப்பு கண்காணிப்பு குழுக்கள்!

சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் நிலையானது முற்றிலும் அகற்றப்படும் நோக்கில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறிதெரிவித்துள்ளார்.

கனிம வளங்கள் கடத்தலை தடுத்திட சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அனுமதியின்றி கனிம வளங்களை கடத்துதல்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கனிம வளங்களை கடத்துதல் மற்றும் விதிமுறைகளை மீறிக் கனிம வளங்களைப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பிற்காக விருதுநகர் மாவட்டம் முழுவதும் குழுக்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களுக்கும், ஒரு வட்டத்திற்கு 4 குழுக்கள் வீதம் மொத்தம் 40 சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்புப் பணி

வட்டாட்சியர்,துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சிறப்புச் சார்பு ஆய்வாளர் (Special Sub-Inspector) மற்றும் உதவிச் செயற்பொறியாளர் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் மேற்கொண்ட சோதனைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சிவகாசி வட்டத்தில் கடந்த 14.11.2026 அன்று சிவகாசி வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உரிய அனுமதிச் சீட்டின்றி 2 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த TN 04 9675 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரி கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதேபோல் வத்திராயிருப்பு வட்டத்தில் கடந்த 17.11.2026 அன்று வத்திராயிருப்பு வட்டக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, சட்ட விரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 120 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் நிலையானது முற்றிலும் அகற்றப்படும்

  அதேபோல் விருதுநகர் வட்டத்தில் கடந்த 17.11.2026 அன்று விருதுநகர் வட்டக் குழுவினர் சட்டவிரோத கனிமக் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அனுமதியின்றிக் கனிமம் ஏற்றி வந்த TN 48 BH 3339 என்ற பதிவெண் கொண்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகுந்த கண்காணிப்புடன் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் குழுக்களாக நியமனம் செய்யப்பட்டு, சட்டவிரோத மணல் கடத்தல் பணிகளை தடுக்க 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அனுமதியின்றி கொண்டுவரப்படும் கனிமங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் துறையினர் மூலம் வழக்குப் பதிவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் நிலையானது முற்றிலும் அகற்றப்படும் நோக்கில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறிதெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்; மலை தீப தரிசனத்திற்கு அலைமோதல்!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்; மலை தீப தரிசனத்திற்கு அலைமோதல்!
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் இந்த முறை. -நீதிபதிகள் கருத்து !
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் இந்த முறை. -நீதிபதிகள் கருத்து !
திருப்பரங்குன்றம் மகா தீபம்: மலை உச்சிக்குச் சென்ற கொப்பரை, திரி!
திருப்பரங்குன்றம் மகா தீபம்: மலை உச்சிக்குச் சென்ற கொப்பரை, திரி!
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு... நீதிமன்றத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை !
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு... நீதிமன்றத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை !
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
Embed widget