மேலும் அறிய
Advertisement
Diwali Special Trains | தென்மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் ! மகிழ்ச்சியில் மக்கள்
”தீபாவளி சமயத்தில் அதிக கூட்ட நெறிசலை தவிர்க்க தென்மாவட்டங்களுக்கு மூன்று தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்தது வரவேற்கத்தக்கது” என்றனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
1. வண்டி எண் 06037 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3- ம் தேதி அன்று இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06038 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலிலிருந்து நவம்பர் 5- ம் தேதி மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
2. வண்டி எண் 06040 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக சென்று மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3. வண்டி எண் 06049 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நவம்பர் 8- ம் தேதி மாலை 04.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, கோவில்பட்டி வழியாக சென்று மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு விழுப்புரம் அரியலூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...! - மதுரை மாவட்ட மக்களுக்கு நடிகை சினேகா வேண்டுகோள்...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion