மேலும் அறிய

தேனி: உரம் வாங்க சென்ற கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலை

’’போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது’’

தேனி மாவட்டம் கூடலூர் 12ஆவது வார்டு ஜக்கனநாயக்கர் தெருவை சேர்ந்த விவசாயி வீருசி (48). இவருடைய மனைவி முத்துலட்சுமி (38). இவர்களுக்கு  2 மகன்கள் உள்ளனர். இதில் சுபாஷ் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 2 ஆவது மகன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பெருமாள் கோவில்புலம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மொச்சை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளனர்.

தேனி: உரம் வாங்க சென்ற கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலை
 
இந்த நிலையில் மொச்சை பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்காக வீருசிக்கு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மனைவி முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ஆனால் அன்று அவர்கள் 2 பேரும் மாலை வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூவேஸ், மொச்சை சாகுபடி செய்திருந்த நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு பூச்சி மருந்து அடிக்கும் பம்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மட்டும் இருந்தது. வீருசிக்கையும், முத்துலட்சுமியையும் காணவில்லை. 

தேனி: உரம் வாங்க சென்ற கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலை
 
இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் மூவேஸ் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலிசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் நேற்று கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் 2 பேர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலிசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வீருசிக்கும், முத்துலட்சுமியும் விஷம் குடித்து இறந்துகிடந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மூவேசை அழைத்து வந்து போலீசார் காண்பித்தனர். இதில் இறந்து கிடப்பது தனது பெற்றோர் தான் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
 
 

தேனி: உரம் வாங்க சென்ற கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலை
 
இதையடுத்து கணவன், மனைவி இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
DMK:
DMK: "சோனியா டூ டிகே சிவக்குமார் வரை.." ஸ்டாலினைப் பார்க்க ஓடி வரும் காங்கிரஸ் தலைவர்கள்! ஓகே சொல்லுமா திமுக?
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Mining Control Centre: கனிமவள கொள்ளைக்கு கிடுக்குப்பிடி..! அள்ளுவது தொடங்கி டெலிவெரி வரை - முழு கண்காணிப்பு
கனிமவள கொள்ளைக்கு கிடுக்குப்பிடி..! அள்ளுவது தொடங்கி டெலிவெரி வரை - முழு கண்காணிப்பு
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
Metro: சென்னைவாசிகள் ஹாப்பி..! மெட்ரோவுடன் இணையும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கம்பெனிகள்
சென்னைவாசிகள் ஹாப்பி..! மெட்ரோவுடன் இணையும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கம்பெனிகள்
Innova Rival: ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
ரைட்ரா.. இன்னோவாவிற்கு போட்டியாக வரும் புது MPV.. ஜப்பான் ப்ராண்ட் உடன் தெ.கொரியா போட்டி
Embed widget