மேலும் அறிய

ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்

ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன.

ராமேஸ்வரம் ரயில் நிலையம் மதுரை ராமேஸ்வரம் ரயில்வே பிரிவில் உள்ள ஒரு முக்கியமான ரயில் நிலையம்/ முனையம் ஆகும். இந்த ரயில் நிலையம் புறநகர் இல்லா ரயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறது. இந்த ரயில் நிலையத்தை தினந்தோறும் சராசரியாக 9,000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பாம்பன் தீவில் உள்ள இந்த ரயில் நிலையம் இலங்கை மன்னார் தீவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்றே ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூபாய் 90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் பணி அமர்த்தப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
 
நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான பணியிடங்களில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடப் பணி நிறைவு பெற உள்ளது. சிமெண்ட் கலவையை கடத்தும் கன்வெயர் தடம் அமைக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் பணிகளை துவக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
 
ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு ரயில் நிலைய கட்டிடம் உருவாக இருக்கிறது. ராமேஸ்வரம் கோவில் கோபுர அமைப்புடன் நவீன கட்டிடக்கலை அம்சத்துடன் ரயில் நிலைய கட்டிடம் அமைய இருக்கிறது. கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் இரு மாடி கட்டிடம் அமைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் நாலு மாடிகள் கட்டும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்து நடைமேடை எண்  1, 2, 3 ஆகியவற்றிற்கு நேரடியாக செல்லும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. நான்காவது நடைமேடைக்குகு செல்வதற்கு மட்டும் அமையப் போகும் புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும். இருந்தாலும் கிழக்கு பகுதி கட்டிடத்தின் திறந்த வெளி வர்த்தக பயன்பாட்டு மாடி பகுதியில் இருந்து நேரடியாக  நடைமேடை எண் 4 மற்றும் புதியதாக அமைய இருக்கும் நடைமேடை எண் ஐந்திற்கும் செல்லும். வசதியும் அமைய இருக்கிறது. முன்புறத்தில் தனியாக பாதசாரிகளுக்கான பாதை அமைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள், 4 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன.
 
ரயில் நிலையத்திற்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளுக்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட உள்ளன.  இந்த கட்டிடத்தில் பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைய உள்ளன. வாகனங்கள் வந்து செல்ல தனிப்பகுதியும், இருபுறமும் தூண்களுடன் பாதசாரிகள் நடந்து செல்ல ராமேஸ்வரம் கோவில் பிரகார அமைப்பில் நடைபாதை அமைய இருக்கிறது. நடைமேடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பகுதியில் குழுவாக சுற்றுலா வரும் பயணிகள் காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. வடக்குப் பகுதியில் அமைய இருக்கும் ஒரு மாடி கட்டிடத்தில் ரயில்வே நிர்வாக அலுவலகங்கள் அமைய இருக்கின்றன. தற்போதைய நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக இருக்கின்றன. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியுடன் கூடிய காப்பகங்கள்,  ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறைகளுடன் கூடிய உபரயில்நிலையை கட்டிடங்கள்,  ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget