மேலும் அறிய
Advertisement
கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது - ஓபிஎஸ்
நாங்கள் தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். விலகி இருப்பது பழனிச்சாமி அவர்கள் தான் - ஓபிஎஸ்
கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்., பேட்டி.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்:
அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது.
இந்திய கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்த கேள்விக்கு
அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு. உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும்.
எல்.முருகன் மத்திய அமைச்சராக தகுதி இல்லை என டி.ஆர்.பாலு கூறியது குறித்த கேள்விக்கு
அந்த செய்தியை நான் முழுமையாக பார்க்கவில்லை பார்த்த பிறகு கூறுகிறேன்.
உங்களிடம் வராமல் எடப்பாடி இடம் செல்கிறது குறித்த கேள்விக்கு
இப்பவே சண்டையை ஆரம்பித்து வைக்கிறீர்கள்.
உங்கள் பின்பு இருப்பவர்கள் கூலி ஆட்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஜெயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு
உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்.
அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா எடப்பாடி அணியையா என்ற கேள்விக்கு
நாங்கள் தொடர்ந்து எண்டிஏ கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம் விலகி இருப்பது பழனிச்சாமி அவர்கள் தான்.
எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு
உறுதியாக உங்களிடம் சொல்வேன் என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மதுரை
தமிழ்நாடு
கால்பந்து
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion