மேலும் அறிய

ஜல்லிக்கட்டு வழக்கு: முகிலனுக்கு ஜாமின்! 'காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கை' - என முகிலன் ஆவேசம்

2017 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கு  முகிலனுக்கு பிடிவாரண்ட் - சிபிசிஐடி காவல்துறையினரால் கைது - நிபந்தனையிடன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

காவல்துறையினரின் முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது ;  விவசாயிகள் மீது  போடப்பட்ட வழக்கை ரத்து செய்யப்பட்டதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார் ஆனால் காவல்துறை அழைப்பானை அனுப்பி சம்மன் கொடுக்கிறார்கள் இது சட்ட விரோதம் - முகிலன் பேட்டி.
 
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கு
 
2017 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் சமூக ஆர்வலரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் முகிலனை மதுரை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தனக்கு 3 மாதமாக உடல்நிலை சரியில்லை என கூறிய நிலையில் மருத்துவசான்றை சமர்பிக்குமாறு கூறி நிபந்தனையுடனான ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் ; 
 
2017இல் மதுரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் நான் உள்ளிட்ட 4 பேர் மீதான்  வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. 3 மாதம் உடல் நலிவுற்று இருந்ததால் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் என் மீது வாரண்டு பிறப்பித்தார்கள். அதனை தெரிவித்த போது நாளை வாய்தா உள்ளதால் நேரில் வாரண்ட் ரீ கால் செய்ய வேண்டும் என சிபிசிஐடி  காவல்துறையினிடம் தெரிவித்தேன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பில் 125 கல்குவாரிகளில் கனிம கொள்ளை நடந்துள்ளது ;  முதலமைச்சராக அவர்கள் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யப்பட்டதாக 110 விதியின் கீழ் அறிவித்தார் ஆனால் கடந்த சில மதங்களுக்கு முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் எங்கள் மீது வழக்கு போடப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் அழைப்பாணை வந்துள்ளது முதலமைச்சர் ரத்து என்கிறார் காவல்துறை அழைப்பானை அனுப்பி சம்மன் கொடுக்கிறார்கள் இது சட்ட விரோதம். ஈரோடு மாவட்டத்தில் கனிமவளகொள்ளையை தடுக்க முடியவில்லை என 500 பேரும் நீதிமன்றத்தில் சென்று  குடிமகனுடைய கடமை செய்யவில்லை என சமூக குற்றவாளியாக இருக்கிறோம் என எங்களை கைது செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென அறிவித்திருந்தோம் ; இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை முடித்துக் கொண்டோம். 
 
கண்டிஷன் பெயில் 
 
இந்நிலையில் நான் சாலையில் சென்ற போது காவல்துறையினர் என்னை தடுத்து கைது செய்தார்கள். கைது செய்த தகவலை யாருக்கும் சொல்வதற்கு அனுமதிக்கவில்லை நேற்றிரவு 9 மணிக்கு கைது செய்து விட்டு குறிப்பாணை இன்று காலை  போடுகிறார்கள்; வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்கவில்லை. போராடிய பின்பு தான் வழக்கறிஞர்களிடம் தகவல் சொல்ல அனுமதி தந்தார்கள். மூன்று மாதமாக மருத்துவ சிகிச்சை பெற்று இருக்கிறேன். மருத்துவ அறிக்கை நீதிமன்றத்திற்கு காட்ட அனுமதிக்கவில்லை நீதிபதி அவர்கள் ஏன் ஆஜராகவில்லை என கேட்டார் மருத்துவ காரணங்களுக்காக மருத்துவ அறிக்கை உள்ளதா என கேட்டார் காத்திருக்க சொன்னார். உங்களை விடுவிக்கிறோம் நாளையும் நீதிமன்றத்தில் வாய்தா இருக்ககிறது ஆஜராக வேண்டும் எனவும் மற்ற மூன்று பேரும் ஆஜராக வேண்டும் என கூறியிருக்கிறார்கள். கண்டிஷன் பெயில் என சொல்லியருக்கிறார்கள் இனி தான் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியும்" என்றார்.
 
ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்குக்கு பொருந்தும் 
 
என்னை கைது செய்வதற்கான காரணம் பெருந்துறைக்கு முதலமைச்சர் வரும்போது காவல் துறையின் பல முறைகேடான செயல்பாடுகளை ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3000கோனி டன் வெடி மருந்து சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் அது வெளிவந்துவிடும் காவல்துறைக்கு நெருக்கடி ஆகும் எனவும், சிபிசிஐடி இங்கு முறைகேடாக நடந்திருக்கிறது என்பதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கைது செய்திருக்கிறார்கள். இது காவல்துறையின் முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது என்றார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் முக்கிய மாற்றம்! தங்கரதம் கட்டணம் உயர்வு – முழு விவரம்!
பழனி தண்டாயுதபாணி கோவிலில் முக்கிய மாற்றம்! தங்கரதம் கட்டணம் உயர்வு – முழு விவரம்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி சாதனை: ஒரு கோடிக்கு மேல் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி!
வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி சாதனை: ஒரு கோடிக்கு மேல் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Embed widget