மேலும் அறிய

சீமான் பரபரப்பு பேச்சு: அமெரிக்கா வரி விதிப்பு வரவேற்கத்தக்கது! திமுக, அதிமுகவை சாடியது ஏன்?

தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது, இரண்டும் ஒரே கொள்கை. ஆனால் நான் அண்ணன் வழியில் செல்கிறேன் - சீமான் மதுரையில் பேட்டி.

அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது வரவேற்கத்தக்கது - சீமான் சொல்லவருவது என்ன?

கூட்டணி வைத்து எம்.எல்.ஏ., வென்றவர்கள் சாதித்தது என்ன?

அண்மையில் மதுரை உயர்மறை மாவட்டப் பேராயராக பொறுப்பேற்ற அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில்...," மூன்று தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற கோரிக்கை வைக்க வேண்டும். தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் அது யாரிடம் அடமானத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது திமுக வேடம் போடுகிறது. எங்களுக்கு இருப்பது சுதந்திர பசி, என்னுடன் இருப்பவர்கள் என்னிலும் உறுதியானவர்கள் எனவே எங்களுக்கு கூட்டணி தேவை இல்லை. கூட்டணிக் கட்சி வைத்து எம்.எல்.ஏ., வென்றவர்கள் இது வரை சாதித்தது என்ன? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

ஒரே நாடு ஒரே ரோடு - ஆனால் பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் வராது

சீட்டுக்கு தான் கட்சி என்றால் கொள்கை எதற்கு. தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் வாக்கு சேர்ப்பது குறித்து திமுக விற்கு எந்த கவலையும் இல்லை, அவர்கள் வாக்கை எப்படி பெறவேண்டும் என்று திமுக சிந்திக்கிறது. வடஇந்தியர்களுக்கு வாக்கு கொடுத்தால் அவர்கள்தான் நாளை தமிழக அரசியலை முடிவு செய்வார்கள். வடஇந்தியர்கள் வாக்கு முழுவதும் பாஜக வாக்கு தான். இது முழுவதும் திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரோடு என்று சொல்கிறார்கள், ஆனால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராது, கேரளாவில் இருந்து தண்ணீர் வராது.

இந்தியா வளர்கிறது என்று கூறுகிறார்கள் ஆனால் நிலை என்ன?

நான் ஆட்சிக்கு வந்தால் வடஇந்தியர்களிடம் நுழைவு சீட்டு கேட்பேன். இந்திய இன்றும் கடன்கார நாடாக இருக்கிறது, ஆனால் இந்தியா வளர்கிறது என்று கூறுகிறார்கள், அதையும் மக்கள் நம்புகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் நல்ல ஆட்சி வரும். பிசாசை விவாகரத்து செய்து பேயை திருமணம் செய்வது போல், திமுக வேண்டாம் என்று அதிமுக விற்கும் , அதிமுக வேண்டாம் என்று திமுகவிற்குன் வாக்கு செலுத்துகிறரர்கள். யாரும் திமுக, அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவது இல்லை.

தவெக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு?

இது போல் நிறைய கட்சிகள் வரும் போகும், விஜயகாந்திற்கு இல்லாத எழுச்சியா? கமல்ஹாசனும் வந்தார் சென்றார், அவ்வளவு தான். திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது. இரண்டும் ஒரே கொள்கை. ஆனால் நான் அண்ணன் வழியில் செல்கிறேன். எங்கள் வழி பிரபாகரன் வழி. அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பது வரவேற்கத்தக்கது. எப்போதாவது இந்திய அரசு விழித்துக்கொள்கிறதா என்று பார்ப்போம். எங்களால் ரோடு ஷோ நடத்தமுடியாது, அடுத்தடுத்து நிறைய போராட்டங்கள் நடத்த இருக்கிறோம்” என்றார்.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget