மேலும் அறிய

Madurai: மதுரசோறு..! ஆஹா சொல்ல வைக்கவும் அசைவ விருந்து - மதுரை சுப்புகடை சுவையோடு விழிப்புணர்வும்..!

”வாடிக்கையாளர்களுக்கு டேஷ்டான உணவு மட்டுமில்ல சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வும் கொடுக்குறோம்” என சுப்புகடை உரிமையாளர் பெருமிதம்.

"மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, கறி தோசை,  குடல் குழம்பு, மிளகுக் கறி, தலக்கறி, வெங்காயக் கறி" - என காரஞ்சாரமா வெரைட்டியா சாப்ட வந்த இடம் தான் சுப்புகடை. மதுரையில் நான் வெஜ் பிரியர்களுக்கு பிடித்த ஸ்பாட்டில் அழகரடி முக்குக்கடை கே.சுப்பு ஹோட்டலும் ஒன்று.

மெஜிரா கோர்ட்ஸ்:

60 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இவங்களுக்கு மதுரையில் நான்கு  பிரான்ச் உள்ளது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து இருக்கும் கடை மெஜிரா கோர்ட்ஸ் அருகே உள்ள ஹோட்டல் தான். மெஜிரா கோர்ட்ஸ் தொழிலாளர்களுக்காக இந்த கடை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இட்லி கடையா இருந்து, பியூர் நான் வெஜ் ஹோட்டலா மாறியிருக்கு. சுப்புகடையில் ஹோட்டல் தொழிலோட சமூக விழிப்புணர்வும் ஏற்படுத்துராங்க.

Madurai: மதுரசோறு..! ஆஹா சொல்ல வைக்கவும் அசைவ விருந்து - மதுரை சுப்புகடை சுவையோடு விழிப்புணர்வும்..!

சுப்புகடை உரிமையாளர் நவனீதன் நம்மிடம்...," தாத்தா காலத்தில் இருந்து ஹோட்டல் நடத்திக்கிட்டு இருக்கோம். ஆனாலும் அப்பா இந்த தொழிலுக்கு வரல, அவர் வாத்தியார். எனக்கு எங்க தாத்தா தொழில் பிடிச்சு போயி சமையல முழுசா கத்துக்கிட்டேன். மதுரையில் நான்கு இடத்தில் ஹோட்டல் நடத்துரோம். மெஜிரா கோர்ட்ஸ் அருகே உள்ளது தான் பாரம்பரிய கடை. அதனால அங்க அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கே.கே.நகர் பகுதியில் இருக்கும் மூங்கில் கார்டன் வித்தியாசமா இருக்கும்.

Madurai: மதுரசோறு..! ஆஹா சொல்ல வைக்கவும் அசைவ விருந்து - மதுரை சுப்புகடை சுவையோடு விழிப்புணர்வும்..!

வாடிக்கையாளர்கள் மனசும், வயிறும் நிறையும்படியா இருக்கும். மூங்கில் செட்டப்பில் முழுசா செஞ்சுருப்போம். அது பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.  பரோட்டால இருந்து, பிரியாணி வரைக்கும் நம்ம கடையில கிடைக்கும். மெஜிரா கோர்ட்ஸ் அருகே உள்ள பிராஞ்சுல தான் அதிகமா இருப்பேன். மதியான 12 மணில இருந்து இரவு 12;30 வரைக்கும் கடை இயங்கும்.

Madurai: மதுரசோறு..! ஆஹா சொல்ல வைக்கவும் அசைவ விருந்து - மதுரை சுப்புகடை சுவையோடு விழிப்புணர்வும்..!

பரபரப்பா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்துக்கிட்டு இருக்கோம். பல வி.ஐ.பி.,கள் நம்ம கடை கஷ்டமர்ஸ் தான்.  இந்த ஹோட்டல் தொழில் மூலமா தொடர்ந்து விழிப்புணர்வு செஞ்சுகிட்டு இருக்கோம். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில்  மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மஞ்சள் பையில் பார்சல் உணவுகளை கொடுக்கிறோம். 2 பரோட்டா வாங்குனா கூட பிளாஸ்டிக் கவர் கொடுக்கப்படுவதில்லை.

Madurai: மதுரசோறு..! ஆஹா சொல்ல வைக்கவும் அசைவ விருந்து - மதுரை சுப்புகடை சுவையோடு விழிப்புணர்வும்..!

அவர்களுக்கு காப்பி கலர் கவர்ல தான் கொடுக்குறோம். கடையின் முன்பாக பிரமாண்ட மஞ்சள் பை விழிப்புணர்வு செஞ்சோம். சமையளர் உடையில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். மஞ்சள் பை வடிவில் பரோட்டா செஞ்சு கொடுக்கிறோம். அதற்கும் குறைவான விலையை தான் நிர்ணயக்கிறோம். இப்படி பல்வேறு வடிவங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்" என்றார் மகிழ்வாக.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - முயற்சியால் முன்னேறிய இஸ்லாமிய பெண் ; முருகன் கோயிலில் பாகுபாடில்லாமல் பாடம் எடுக்கும் மாற்றுத்திறனாளி

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget