மேலும் அறிய
Advertisement
"திமுகவில் குடும்பம் தான் கழகம்" - செல்லூர் ராஜூ காட்டம்
சென்னை மேயரை காரில் தொத்தி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த அதிகாரியான ககன் தீப்சிங் பேடி ஓடி வந்து காரில் ஏறுகிறார். - செல்லூர் ராஜூ வேதனை
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், "அதிமுகவுக்கு கூடும் கூட்டத்தை தமிழக உளவுத்துறை முதல்வரிடம் எடுத்து கூறியிருக்கும்” என்று கூறினார்.
அ.தி.மு.க.,வில் நிலவும் பிரச்னைகளை மறைக்கவே அ.தி.மு.க., தொடர் போராட்டம் நடத்துகின்றனர் என அமைச்சர்களின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க.,வின் தொடர் போராட்டம் வெற்றி பெறுவதை அமைச்சர்களால் தி.மு.க.,வால் தாங்க கொள்ள முடியவில்லை. அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்களை பொறுப்படுத்த மாட்டோம். அ.தி.மு.கவின் நோக்கம் தெளிவானது. எங்களின் எண்ணம் உயர்வானது. தி.மு.க., மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது. அ.தி.மு.கவை குறைத்து மதிப்பிடும் மற்ற கட்சிகளுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க., ஒன்றுபட்ட இயக்கம். அ.தி.மு.க.,வில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம். அதைப்பற்றி நாங்கள் பொருட்படுத்தவில்லை. தி.மு.க., அமைச்சர்கள் கலெக்க்ஷன், கரெப்ஷன் என உள்ளனர். அவர்களின் ஊழலை மறைக்க எங்களை குற்றம் சாட்டுகின்றனர். அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருதி போராட்டங்களை நடத்தவில்லை. தேர்தலை நோக்கி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை.தேர்தல் வரும் போகும், நாங்கள் மக்கள் நலுனுக்காகத்தான் போராடி வருகிறோம். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது திமுக.தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் ஆறாக பெருகி உள்ளது. நாளைய தேர்தலை எண்ணி அதிமுக போராடவில்லை. அதிமுக செல்வாக்கை நிருபிக்க போராட்டம் நடத்த வேண்டியது இல்லை என்று பதில் அளித்தார்.
உதயநிதி அமைச்சராக உள்ளது குறித்த கேள்விக்கு,
தி.மு.க., பெருபான்மையாக உள்ளதால் யாரையும் அமைச்சராக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. தி.மு.க., ஒரு கம்பெனி தான். தி.மு.கவில் குடும்பம் தான் கழகம். குடும்பத்தினர் தான் தலைவர். ஏற்கனவே உதயநிதி முதல்வர் ஆக தான் உள்ளார். துர்கா ஸ்டாலின், சபரீசன் என எல்லோரும் முதல்வராக தான் உள்ளனர். முதல்வர் தினந்தோறும் நான் உள்ளதை வெளியே காண்பித்துக்கொள்ள நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். வெளிநாட்டு அதிபர்கள் தான் சொகுசு ரயிலில் போயுள்ளனர். பல லட்சத்தை கொடுத்து சொகுசு ரயிலை முதல்வருக்கு ரயிலை புக் செய்துள்ளனர். மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது. முதல்வர் எந்த வண்டியிலும் போகலாம் வரலாம். தி.மு.க.வினர் கூச்சப்படமாட்டார்கள். எந்த அமைச்சரும் மக்களுக்கு பயப்பட மாட்டார்கள். திராவிட மாடல் எனச்சொல்லும் முதல்வர் சென்னை மேயரை காரில் தொத்தி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த அதிகாரியான ககன் தீப்சிங் பேடி ஓடி வந்து காரில் ஏறுகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களால் திமுகவை காரித்துப்புகின்றனர். இதுபோன்ற செயல்களால் தான் அரசியல்வாதியை மக்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர். மேயருக்கு உரிய அரியாசனம் கொடுத்திருக்க வேண்டும். திமுக மாற வேண்டும். அதிகாரிகள் முதல்வரை காக்கா பிடிக்க வேண்டும் என நினைத்து துர்கா ஸ்டாலினுக்கு முதல்வர் அளவுக்கு மரியாதை கொடுக்கின்றனர். சாமிக்கு சாதா கொடையும், துர்கா ஸ்டாலினுக்கு முத்துக்கொடையும் தூக்கி கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து செல்கின்றனர். தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீர்கெட்டு போயுள்ளது. தமிழகத்தில் முன்மாதிரியாக எந்த துறையும் இல்லை, ஆய்வு செய்ய சென்ற அமைச்சரே லிப்டில் மாட்டிக்கொள்ளும் அச்சம் நிலவும் ஆட்சியாக உள்ளது. திமுக வினோதமானை ஆட்சி. கலைஞர் கூட தவறு செய்தவர்களை கண்டிப்பார். நடவடிக்கை எடுப்பார். ஆனால் ஸ்டாலின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று பதிலளித்தார்.
ஒ.பி.எஸ் குஜராத் செல்வது குறித்த கேள்விக்கு,
நாங்கள் பெங்களூர் சென்று கொண்டுள்ளோம். நீங்கள் தென்காசி செல்வதை பற்றி கேட்கிறீர்கள். மக்கள் பிரச்னைகளை கேளுங்கள் என கோபப்பட்டார். திமுக ஆட்சி முழுமையாக ஆட்சி நடந்ததாக வரலாறு இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை என செல்லூர் ராஜூ பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion