மேலும் அறிய

மின்சாரத் துறை சீரமைப்பு, 15,000 வேலைகள்: ஊழல் அம்பலமாகும் - அமைச்சர் நிர்மல் குமார்!

பல ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த போக்குகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. - மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.

மின்சார துறையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேர்களை வேலைக்கு எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்-மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார பேட்டி.
 
கபடிப் போட்டியை துவங்கி வைத்த அமைச்சர்
 
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து கபடி போட்டியை காண வந்த தொண்டரின் ஒருவரின் மகளை அழைப்பு தனது மடியில் வைத்துக் கொண்டு அந்த சிறுமியுடன் கபடி போட்டியை கண்டு களித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர்
 
புதிய ஐந்து எரிசக்தி மண்டலங்களால் பொது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த கேள்வி.
 
சோலாரில் அதிகமான இன்வெஸ்ட்மென்ட் செய்யப்படுவதால் கடந்த 5ஆண்டுகளில் அதிகமான விதிமுறைகளும் முறைகளும் நடைபெற்றுள்ளன. நான் கேள்விப்பட்ட வரைக்கும் தனிநபரை வைத்து ஒரு மெகா வாட் 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அப்ளிகேஷன் உள்ளே போகும். அதற்கான இடத்தை அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதில், 10 லட்சம் பெறுமானம் உள்ள இடத்தை இட புரோக்கர்களிடம் பல கோடி கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்படும். தமிழ்நாட்டில் 256க்கும் மேல் கோல்ட் சப்சன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 2.20 பைசாக்கு விற்கக்கூடிய சோலார் நடுவில் இருக்கும் இடைத்தரகர்களால் பல மடங்கு செல்லும் கடந்த 10 வருடமாக நடந்த விதிமுறைகள் முதல்வரின் ஆலோசனைப்படி அனைத்தும் லாபிகளும் உடைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரண்டான ஒரு சிஸ்டத்தை விரைவில் லாஞ்ச் பண்ண உள்ளோம். திருநெல்வேலி, உடுமலை சென்டரில் பெரும்பாலான புரோக்கர்கள் செயல்பட்டார்கள் அதை முழுவதுமாக முடிக்கப்பட்டது. பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். டிரான்ஸ்பரண்டான ஒரு போர்டல் அடுத்த பத்து நாட்களில் உருவாக்கப்படவுள்ளது இனி யாரும் ஒரு மெகாவெட் 25 லட்சம் கொடுக்க வேண்டியது இல்லை.
 
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை எப்போது வரும் அதில் நடிந்த ஊழல் கண்டறியப்படுமா‌ குறித்த கேள்விக்கு: 
 
மின்சாரத் துறை தரப்பில் வெள்ளை அறிக்கை வரும் வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும் இந்தத் துறையின் நிலை என்ன எந்தெந்த வகையில் நஷ்டம் ஏற்பட்டது எந்தெந்த இடங்களில் ஊழல் நடந்தது என்று வெளியிடுவோம்.
 
செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு: 
 
தெரியலை பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் உத்தமர் செந்தில் கடந்த 10 வருடங்களில் பாலாஜி பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. எந்த வழக்கு என்ன என்று தெரியவில்லை அந்தந்த துறைகளுக்கு தான் தெரியும். இந்த வருடம் புதிதாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். பழைய ஆட்சியில் உத்தரவாதம் கொடுத்தவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தத் துறையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேர்களை வேலைக்கு எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம். குற்ற சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முந்தயை ஆட்சியில் குற்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டன மூடி மறைக்கும் வேலையில் அரசாங்கம் ஈடுபட்டது. இந்த ஆட்சியில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள் விசாரணையில் தவறில்லை ஏதும் இல்லை அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது இதற்கான ரிசல்ட் கூடிய விரைவில் பார்ப்பீர்கள். 
 
ஆவண படுகொலை சட்டம் நிறைவேற்றப்படுமா குறித்த கேள்விக்கு:
முதல்வர் தலைமையில் அது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முடிந்தவுடன் கண்டிப்பாக தெரிவிக்கிறோம்.
 
மின்தடை எதற்காக தடை ஏற்படுகிறது.
 
எதனால் ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை சார்பாக அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னர் மின்சாரத் துறையில் பொதுமக்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்றார்கள் ஆனால் தற்போது மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கையிலும் நிறைவேற்றி வருகிறோம். 
 
மின்சாரம் டிரான்ஸ்பார்ம் பராமரிப்பு பணிக்காக அரசு சார்பில் வழங்கப்படும் ஆயில் நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு: 
 
டிரான்ஸ்பாரம் டெண்டர் எஸ்டிமேட் பண்ணுவதில் தவறு உள்ளது அதனை சீரமைப்பதற்கான வேலை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் எந்த டெண்டரும் வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். எட்டு லட்ச ரூபாய் ட்ரான்ஸ்பாரம் 13 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுகிறது. இந்த அரசுக்கு எந்த கமிஷனும் வேண்டாம் மக்களுக்கும் நிறுவனத்திற்கும் செல்லக்கூடிய பணம் அங்கு சொல்லட்டும். டெண்டர் எதுவும் நிறுத்தப்படவில்லை.
 
டிரான்ஸ்பரம் ஊழல் சிபிஐ விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை திருடியவர்கள் அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு திமுகவுடன் இணக்கமாக இருக்கும் காரணத்தால் செந்தில் பாலாஜி அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு அனுப்பினோம் ஆனால் கவர்னர் அலுவலகத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கவில்லை. பல மாதமாக தூங்கிக் கொண்டிருந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளோம் இதுவரை கவர்னர் ஏன் பிடித்து வைத்திருக்கிறார். இனிமேல் சிபிஐ நடவடிக்கை எடுக்குமா சிபிஐயும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்படுகிறார்களா அதனால்தான் கவர்னர் செந்தில் பாலாஜி மீதும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை இணைந்து செயல்படுகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் மத்திய அரசு 'நோ': தமிழக வளர்ச்சிக்குத் தடை?
மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் மத்திய அரசு 'நோ': தமிழக வளர்ச்சிக்குத் தடை?
அரிசி விலை உயர்வு: மக்கள் கலக்கம், 'ஜனநாயகன்' கவலையில் முதல்வர் விஜய்? - ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம் !
அரிசி விலை உயர்வு: மக்கள் கலக்கம், 'ஜனநாயகன்' கவலையில் முதல்வர் விஜய்? - ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம் !
மதுரையில் நாளை மின்தடை (ஜூலை 28) : உங்கள் பகுதிக்கு பாதிப்பு உண்டா? உடனே செக் பண்ணுங்க !
மதுரையில் நாளை மின்தடை (ஜூலை 28) : உங்கள் பகுதிக்கு பாதிப்பு உண்டா? உடனே செக் பண்ணுங்க !
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Chennai Power Cut: சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
Embed widget