மேலும் அறிய
Advertisement
Tamilisai Soundarrajan: தமிழக ஆளுநர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறாரா..? தமிழிசை சவுந்திரராஜன் பதில் என்ன..?
ஆளுநர்கள் மசோதா வந்தவுடன் கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கான விளக்கங்களை கேட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு படலாம் என்று நான் நினைக்கிறேன்.
மதுரை விமான நிலையத்தில் தென்காசியில் தனியார் நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்..,”
தமிழக ஆளுநர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்ஜள் கேள்வி !
— arunchinna (@arunreporter92) December 4, 2022
”அது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை” - என தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான @DrTamilisaiGuv பேட்டி !#madurai | #bjp pic.twitter.com/pLaIG0QHj4
தமிழக ஆளுநர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "அது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை" எனக் கூறிச்சென்றார்.
ஆன்லைன் சூதாட்டம் விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சவுந்திரரராஜன், ஆளுநர் அரசாங்கத்திடம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். முற்றிலுமாக அதில் அவர் திருப்தி அடையாததால் தான் தாமதமாகிறது ஆளுநருக்கு சந்தேகம் எழுப்ப உரிமை உள்ளது. ஆளுநர்கள் மசோதா வந்தவுடன் கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை. அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கான விளக்கங்களை கேட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று நான் நினைக்கிறேன்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion