மேலும் அறிய

திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி , கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை சிறிதுநேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனை தொடர்ந்தது. மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேக கூட்டங்கள் கூடின. சில மணி நேரம் வரை மேக மூட்டத்துடன் மட்டுமே காணப்பட்ட வானிலை மாலை 5.30 மணி அளவில் சாரல் மழையாக தொடங்கி சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.

Agnipath : போராட்டக்களமாக மாறிய வட மாநிலங்கள்.. அக்னிபாத் திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்த மத்திய அரசு


திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

மேலும் படிக்க: மும்பை : நகைகளை ’லபக்கிய’ எலிகள்.. நடுரோட்டில் பதறிய பெண்.. போலீஸ் செய்த பரபர வேலை.. சேஸிங் சீனே இதுதான்..

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த மழையால் திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலை, ஏ.எம்.சி.சாலை, பஸ் நிலைய பகுதி, திருச்சி சாலை, மதுரை சாலை உள்பட பல நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஒருசில இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் நீந்தியபடி வாகனங்கள் சென்றன. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் மாலையில்  கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் பழனி, கொடைக்கானல் பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் மாலை 6 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு இரவு வரை மழை நீடித்தது. இந்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது.

இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 25 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: Rajiv Gandhi Assassination Case : ராஜீவ்காந்தி கொலை வழக்கு : விடுவிக்கக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget