மேலும் அறிய

நீலகிரி பழங்குடியினருக்கு 'ப்ராஜெக்ட் ரே' ஒளி: சூரிய மின்சக்தியால் நெகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் கூடமூலா பழங்குடியினக் குடியிருப்பில் 120 பழங்குடியினக் குடும்பங்களுக்காக 20 சூரிய மின்சக்தி தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. 

நீலகிரி பழங்குடியினர் குடியிருப்பில் ‘ப்ராஜெக்ட் ரே’ திட்டத்தின் கீழ் 20 சூரிய மின்சக்தி தெருவிளக்குகளை நிறுவிய CK கல்வி நிறுவனங்கள் குழுமம் மற்றும் நிலையான மேம்பாட்டு கவுன்சில் (SDC).
 
எரிசக்தித் தீர்வு
 
 போதிய அடிப்படை வசதிகள் கிடைக்காத பழங்குடியினச் சமூகங்களுக்கு நிலையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளை வழங்கும் நோக்கில், CK கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் ஓர் அங்கமான சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (CKCET) மற்றும் நிலையான மேம்பாட்டு கவுன்சில் (Sustainable Development Council) ஆகியவை இணைந்து, தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் ‘ப்ராஜெக்ட் ரே: நிலையான தெருவிளக்கு இயக்கம்’ (Project Ray: Sustainable Streetlight Mission - SSM) திட்டத்தை இன்று அறிவித்துள்ளன. SDC-யின் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மைப் பிரிவான சீராக்குவால் முன்மொழியப்பட்ட இத்திட்டத்தின் முதற்கட்டமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் உள்ள கூடமூலா பழங்குடியினக் குடியிருப்பில் 20 சூரிய மின்சக்தி தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 120 பழங்குடியினக் குடும்பங்கள் வசிக்கும் இக்குடியிருப்பில், இதற்கு முன்பு நான்கு தெருவிளக்குகள் மட்டுமே இருந்தன. இதனால், இரவு நேரங்களில் பல பாதைகளில் போதிய வெளிச்சம் இல்லாத நிலை நிலவியது. மேலும், அருகில் வனவிலங்குகள் நடமாடுவதை முன்கூட்டியே கண்டறிவதிலும் குடியிருப்புவாசிகளுக்குச் சிரமம் ஏற்பட்டது. இந்த அடிப்படை உள்கட்டமைப்புத் தேவையை நிவர்த்தி செய்வதுடன், நீண்டகால சமூக மேம்பாட்டிற்கான அடித்தளத்தையும் இத்திட்டம் அமைக்கிறது. இத்திட்டத்தின் தொடக்க விழாவில் வனத்துறை உதவிப் பாதுகாவலர் (ACF) ஸ்ரீனிவாசன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
 
பொறுப்புணர்வு மிக்க கலாசாரத்தை வளர்ப்பதே நோக்கமாகும்
 
இம்முயற்சி குறித்துப் பேசிய செல்வி. அமுதவல்லி ரங்கநாதன், தலைவர் - யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம்) UNESCO Youth Education Research Center) (CREGU INDIA); இயக்குநர்- புதிய முயற்சிகள் மற்றும் மின் வணிகம், கேவின்கேர், செயல் இயக்குநர், CK கல்வி நிறுவனங்களின் குழுமம் தலைவர், சிஐஐ இந்திய மகளிர் அமைப்பு (IWN), தமிழ்நாடு; மற்றும் தலைவர், நிலையான மேம்பாட்டு கவுன்சில், இந்தியா, கூறியதாவது: “கல்வியும் கல்வி நிறுவனங்களின் முன்னேற்றமும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எத்தகைய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதில்தான் அவற்றின் உண்மையான மதிப்பு அடங்கியுள்ளது. வழக்கமான கற்றல் சூழல்களைக் கடந்து, தங்களைச் சுற்றியுள்ள சவால்களைப் புரிந்துகொண்டு, அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்குவதில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது. ஒரு தனிநபரின் வாழ்க்கையை உயர்த்தும்போது, தலைமுறைகளையே உயர்த்துகிறோம் என்பதில் நான் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். மாறிவரும் சமூகத் தேவைகளை எதிர்கொள்ள, கல்வி நிறுவனங்களின் அறிவு, புதுமையான சிந்தனைகள் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆராய விரும்புகிறோம். ஒவ்வொரு தலைமுறையும் சிறந்த எதிர்காலத்தைக் கற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், அதனை உருவாக்குவதிலும் பங்கேற்கும் வகையில் பொறுப்புணர்வு மிக்க கலாசாரத்தை வளர்ப்பதே எங்களது நோக்கமாகும்.”
 
சூரிய மின்சக்தியில் இயங்கும் மேசை
 
தெருவிளக்கு இயக்கத்துடன் இணைந்து, யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் - இந்தியா-வின் ‘நீங்களே செய்யுங்கள் - சூரிய ஆற்றல் விளக்கு முயற்சி’ (‘Do It Yourself - Solar Lamp Initiative’) திட்டத்தின் ஒரு பகுதியாக, CKCET மாணவர்கள் உள்ளூர் பழங்குடியினப் பள்ளி மாணவர்களுக்கு DIY கருவித்தொகுப்புகளைப் பயன்படுத்தி சூரிய மின்சக்தியில் இயங்கும் மேசை விளக்குகளைத் தயாரிப்பதற்குப் பயிற்சி அளித்தனர். பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் மாலை நேரப் படிப்பிற்கு உதவும் வகையில் சூரிய ஒளியினால் இயங்கும் ஒரு மேசை விளக்கு வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் மாணவர்கள் தடையின்றி படிக்க  மேசை விளக்குகளின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், செய்முறை கற்றல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்தது.
 
 
 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சமூக வலைதள ஆயுத மிரட்டல்: 342 வழக்குகள், 193 கைது.. தென்மண்டல ஐஜி கடும் எச்சரிக்கை !
சமூக வலைதள ஆயுத மிரட்டல்: 342 வழக்குகள், 193 கைது.. தென்மண்டல ஐஜி கடும் எச்சரிக்கை !
மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸில் விஸ்டாடோம் பெட்டி: மேற்கு தொடர்ச்சி மலை அழகை 360° ரசிக்க புதிய வாய்ப்பு!
மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸில் விஸ்டாடோம் பெட்டி: மேற்கு தொடர்ச்சி மலை அழகை 360° ரசிக்க புதிய வாய்ப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை வழியே விஸ்டாடோம்: குருவாயூர் எக்ஸ்பிரஸில் இன்று முதல் கண்கவர் பயணம்!
மேற்கு தொடர்ச்சி மலை வழியே விஸ்டாடோம்: குருவாயூர் எக்ஸ்பிரஸில் இன்று முதல் கண்கவர் பயணம்!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை (22.10.2026): இன்றைய நிலவரம்!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை (22.10.2026): இன்றைய நிலவரம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget