மேலும் அறிய

Temple Festival: மாலை தாண்டும் மாடுகள்; ஆண்கள் சட்டை அணியமாட்டார்கள் - திண்டுக்கல்லில் ஒரு வினோத போட்டி...!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்குட்பட்ட செந்துறை அருகே உள்ள பெரியூர்பட்டியில் மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாலை தாண்டும் மாடுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள பெரியூர்பட்டியில் ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்துடன் தொடங்கியது. 8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

குடும்ப தலைவிகளுக்கு விரைவில் மாதம் ரூ.1000.. இப்போது தகவல் சேகரிக்கும் பணிகளில்.. - நிதியமைச்சர் கொடுத்த அப்டேட்

Temple Festival: மாலை தாண்டும் மாடுகள்; ஆண்கள் சட்டை அணியமாட்டார்கள் - திண்டுக்கல்லில் ஒரு வினோத போட்டி...!

விழாவில் கலந்து கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படுகிற மாடுகள் மாலையை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு, பக்தர்கள் கொண்டு வந்த மாடுகள் மந்தைகளில் இருந்து ஒவ்வொன்றாக கோவில் முன்பு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவைகளுக்கு பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்துகொம்பு என்னுமிடத்துக்கு அனைத்து மாடுகளும் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து கரடு முரடான பாதை வழியாக மாடுகள் கோவிலை நோக்கி விரட்டி கொண்டு வரப்பட்டன. மாடுகளுடன், ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். பின்னர் மாலையை தாண்டும் நிகழ்ச்சியில், தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். இதில் 200 மாடுகள் பங்கேற்றன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாடுகள் கவுரவிக்கப்பட்டன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Temple Festival: மாலை தாண்டும் மாடுகள்; ஆண்கள் சட்டை அணியமாட்டார்கள் - திண்டுக்கல்லில் ஒரு வினோத போட்டி...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget